கிரிப்டோகரன்சியின் மீதான முதலீடு மற்றும் லாபத்தின் தாக்கம் உலக நாடுகளில் இருப்பதைப் போல் இந்தியாவிலும் இந்திய மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
கடந்த 17 மாதங்களில் மட்டும் கிரிப்டோகரன்சியில் சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. உலகச் சந்தையில் பிட்காயின் மீதான முதலீடு குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான லாபத்தை அளிக்கும் ஒரு தளமாக உள்ளது.
போலி திட்டம்
இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் கிரிப்டோகரன்சி மீதான முதலீடு ஒரு போலி திட்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் மீதான முதலீடு குறையாமல் இன்றும் இதில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
கருப்புப் பணம்
இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் பெரும் அளவில் கருப்புப் பணத்தைப் பரிமாற்றும் ஒரு தளமாக அமைந்து வருகிறது. குறிப்பாக ஹவாலா மோசடியாளர்கள் அதிகளவில் இத்தளத்தைப் பயன்படுத்துவதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் இதற்குத் தடையும், கட்டுப்பாடுகளும் விதித்து வருகிறது.
தென் கொரியா
சமீபத்தில் தென் கொரியா நாட்டில் பிட்காயின், எதிரம், ரிப்பிள் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு வர்த்தகம் செய்யத் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு குறைந்தது மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி கரன்சிகளும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
கண்காணிப்பு
இந்தியாவைப் பொறுத்த வரையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வோர்கள் அதிகப்படியாக டெக் துறையில் பணியாற்றுபவர்கள், இளம் முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவன முதலீட்டாளர்கள் எனச் சில முக்கியப் பிரிவினர் மட்டும் இதில் முதலீடு செய்து வருகின்றனர்.
மத்திய அரசு
கிரிப்டோகரன்சி முதலீட்டில் இருக்கும் மக்களின் பணத்தைப் பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் இத்தளத்தைக் கருப்பு பண முதலீட்டாளர்களுக்குப் பயன்படுத்த தடை செய்யும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 லட்சம் பேர்
கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை கிரிப்டோகரன்சி முதலீட்டு குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications