போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன் அளித்ததன் மூலமாக வங்கிக்கு 80 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியாகப் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ 22 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் போப்பால் மாற்றும் உஜ்ஜைன் ஆகிய இடங்களில் இருந்து 4 வங்கி கிளைகளில் மட்டும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சோதனை
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வீடு அலுவலகம் எனப் போபால், உஜ்ஜெய்ன், இந்தூர் மற்றும் வித்ஷா (மத்திய பிரதேசம்), கைதால் மற்றும் குருகிராம் (ஹரியானா), ஹோசியர்பூர் (பஞ்சாப்), நொய்டா மற்றும் ஆக்ரா (உத்தரப் பிரதேசம்), மும்பை மற்றும் டெல்லியில் மொத்தமாக 47 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளதாகச் சிபிஐ அறிக்கை கூறுகின்றது.
பயன் அடைந்த வணிகர்கள்
2011 முதல் 2016-ம் ஆண்டு வரையில் நிலக்கரி வணிகர்களுக்கு இந்த வங்கி அதிகாரிகள் போலியான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன அளித்தது மட்டும் இல்லாமல் இவர்களும் அதில் பயன் அடைந்துள்ளனர் என்று சிபிஐ வழங்கு பதிவு செய்துள்ளது.
கடன்
கடன் பெற சமர்ப்பித்த ஆவணங்களின் மதிப்பினை விடப் பல மடங்கு அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். இதேப்போன்று தான் விஜய் மல்லையாவிற்கும் கடன் வழங்கப்பட்டு இருந்தது. வங்கியின் மொத்த வருவாயில் 80 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. செக்யூரிட்டி டெபாசிட் பணம் கூடப் பெறாமல் கடன் அளித்துள்ளனர்.
சிக்கிய ஆவணங்கள்
சிபிஐ நடத்திய சோதனையில் முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், ஹார் டிரைவ்கள் மற்றும் வங்கி லாக்கர் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துள்ளது என அவர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications