கிரிப்டோகரன்சியில் பின்காயின் தான் டாப்பு என்றாலும் தற்போது இதன் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாகப் பல நாடுகளும், நிறுவனங்களுக்கும் தனெக்கென ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று.
அரசு மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களின் கிரிப்டோகரன்சிகள் வெற்றிபெற வேண்டும் என்றால் தற்போது உச்சத்தில் இருக்கும் பிட்காயின் சரிவு அடைய வேண்டும்.
இதற்கான முயற்சியில் தான் தற்போது இந்தியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் ஈடுபட்டு வருகிறது.
வருமான வரித் துறை
மத்திய அரசு ஏற்கனவே தனெக்கென ஒரு தனிப்பட்ட கிரிப்டோகரன்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுகுறித்துப் பட்ஜெட் அறிக்கையில் கூட அருண் ஜெட்லி பிளாக்செயின் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் வருமான வரித் துறை புதிதாக ஒரு வேண்டுகோளை வைத்துள்ளது.
முழுமையான தடை
மத்திய அரசிடம் வருமான வரித்துறை கிரிப்டோகரன்சியை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் இதில் செய்யப்படும் வர்த்தகம் மற்றும் இருப்பு வைத்திருக்கும் கரன்சிகள் என அனைத்து செல்லாத ஒன்றாக மாறிவிடும் என விளக்கும் அளித்துள்ளது.
வரி ஏய்ப்பு
கிரிப்டோகரன்சி மூலம் பல வரி ஏய்ப்புகள் நடப்பதாக மத்திய அரசும், வருமான வரித்துறையும் நம்புகிறது. இதற்காகத் தான் தொடர்ந்து தடையை விதித்து வருகிறது.
புதிய சட்டங்கள்
சுபாஷ் சந்திரா கார்க் தலைமையிலான ஒரு குழு கிரிப்டோகரன்சி வர்த்தகத் தடை குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். தற்போது இக்குழு கடைசிக் கட்ட ஆய்வு பணிகளில் இருக்கும் நிலையில், புதிய தடை சட்டங்கள் அல்லது வர்த்தகக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
ரிசர்வ் வங்கி
இந்திய மக்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் துவங்கப்பட்ட காலம் முதலே ரிசர்வ் வங்கி இதனைக் கவனித்து வருகிறது. ஆனால் தற்போது கிரிப்டோகரன்சி பெயரில் உலகளவில் பல மோசடிகள் நடைபெறும் காரணத்தால் அதிரடி நடவடிக்கையை எடுக்க முனைந்துள்ளது ஆர்பிஐ.
லட்சுமி..
மத்திய அரசு தனக்கென ஒரு கிரிப்டோகரன்சியை வெளியிடும் திட்டமிட்டு உள்ளதாகக் கடந்த வருடமே அறிவித்தது. இதற்குப் பெயர் லட்சுமி.
லட்சுமியின் வெற்றிக்காகப் பிட்காயின் உட்படப் பிற கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தைத் தடை செய்யப்போகிறதா..? என்பதே தற்போதைய கேள்வி. இதற்கு மோடி தலைமையிலான அரசு என்ன முடிவு செய்யப்போகிறது.


Click it and Unblock the Notifications