பிட்காயினில் கோடிகளை அள்ளிய பெரும் பணக்காரர்கள்..!

யாருடைய கண்ணு பட்டுதுன்னு தெரியல.. கிரிப்டோகரன்சியில் முதலீட்டில் பல லட்சங்களை அள்ளிய பலர் தற்போது தெருவுக்குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2 வருடத்தில் ஒட்டுமொத்த உலக முதலீட்டாளர்களையும் வாயைப் பிளந்து பார்க்க வைத்த சிறந்த முதலீடு என்றால் அது பிட்காயின், எதிரம், ரிப்பிள், லைட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் தான். ஆனால் பல்வேறு காரணங்களை முன்வைத்துப் பல நாடுகள் இதன் மீதான வர்த்தகத்தைத் தடை செய்யவும், இதில் முதலீட்டுச் செய்தவர்களைத் தனிப்பட்ட கண்காணிப்பில் வைக்கவும் முடிவு செய்தனர்.

இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடுகள் அதிகளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் அதன் மதிப்புகளும் தாறுமாறாகக் குறைந்தது. இந்தியாவில் பிட்காயின் மதிப்பு 13 லட்சம் ரூபாய் வரையில் சென்ற நிலையில் தொடர் கட்டுப்பாடுகளால் தற்போது 5.75 லட்சம் வரையில் குறைந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையிலும் கிரிப்டோகரன்சி மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

சாங் சி ஹூயாங்

சாங் சி ஹூயாங்

தென் கொரியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான திகழும் அப்பிட்-இன் தலைவர் தான் சாங் சி ஹூயாங். இந்த நிறுவனத்தைத் துவங்கி வெறும் 4 மாதத்திலேயே தென் கொரிய நாட்டின் பிரபலமாக மாறினார் சாங்.

2017 டிசம்பர் மாசத்தில் இந்த வர்த்தகத் தளத்தில் ஒரு நாளுக்கு 11பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் செய்யும் நிலைக்கு அப்பிட் உயர்ந்தது.

38 வயதாகும் சாங் சி ஹூயாங் மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலராகும்.

 

டிம் டிராப்பர்

டிம் டிராப்பர்

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வென்சர் கேப்பிடலிஸ்ட் ஆக இருக்கும் டிம் டிராப்பர், டிராப்பர் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

இவர் கிரிப்டோகரன்சி மீது அதிகளவில் ஈர்க்கப்பட்டு, இதில் அதிகளவிலான முதலீடு செய்து சுமார் 500 மில்லியன் டாலர் வரையிலான பணத்தைச் சம்பாதித்துள்ளார்.

 

 விடாலிக் பட்டரின்

விடாலிக் பட்டரின்

24 வயதாகும் விடாலிக் பட்டரின் எதிரம் என்னும் பிரபலமான கிரிப்டோகரன்சியை உருவாக்கியவர். எதிரம் 100 பில்லியன் டாலர் வரையிலான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. விடாலிக் பட்டரின் தற்போது மைக்ரோசாப்ட், BP மற்றும் ஜேபி மோர்கன் ஆகிய நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறார்.

இவரது சொத்து மதிப்பு 400-500 மில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

பேரி சில்பெர்ட்

பேரி சில்பெர்ட்

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காயின்டெஸ்க் என்னும் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டிஜிட்டல் கரன்சி குரூப்-இன் தலைவர் தான் பேரி சில்பெர்ட். இவரும் ஆரம்பக்கட்டத்தில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து தற்போது 500 மில்லியன் டாலர் வரையிலான கிரிப்டோ வருவாயைப் பெற்றுள்ளார்.

பிராட் கார்லிங்ஹவுஸ்

பிராட் கார்லிங்ஹவுஸ்

ரிப்பிள் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் பிராட் கார்லிங்ஹவுஸ் உள்ளார். இந்நிறுவனம் தற்போது பெரிய பெரிய வங்கிகளுக்குக் கடல் கடந்த பணப் பரிமாற்றத்திற்குத் தேவைப்படும் சேவைகளை வழங்க முயற்சி செய்து வருகிறது.

இவரின் கிரிப்டோ சொத்து மதிப்பு 400-500 மில்லியன் டாலராகக் கணிக்கப்பட்டுள்ளது.

 

சார்லஸ் ஹாஸ்கின்சன்

சார்லஸ் ஹாஸ்கின்சன்

எதிரம் நிறுவனத்தின் துணை நிறுவனரான சார்லஸ் ஹாஸ்கின்சன், இந்நிறுவனத்தின் சிஇஓவாக இருந்தார், ஆனால் நிர்வாகத்துடனான பிரச்சனையில் வெளியேறிவிட்டார். இதன் பின்பு IOHK என்னும் பெயரில் தனியாக ஒரு கிரிப்டோகரன்சியை உருவாக்கத் துவங்கினார்.

இவரின் கிரிப்டோ சொத்து மதிப்பு 500-600 மில்லியன் டாலராகக் கணிக்கப்பட்டுள்ளது.

 

வேலெரி வாவிலாவ்

வேலெரி வாவிலாவ்

பிட்காயின்களை உருவாக்கும் பிட்ப்யூரி என்னும் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் வேலெரி வாவிலாவ்.

38வயதாகும் வேலெரி வாவிலாவ் மொத்த கிரிப்டோ சொத்துமதிப்பு 500-700 மில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

டேன் லாரிமெர்

டேன் லாரிமெர்

பிளாக்.ஒன் என்னும் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் டேன் லாரிமெர் கிரிப்டோவில் அதிகளவிலான முதலீடு செய்துள்ளார். இவரின் கிரிப்டோ சொத்து மதிப்பு 600-700 மில்லியன் டாலாரக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 பிரென்டேன் ப்ளூமெர்

பிரென்டேன் ப்ளூமெர்

பிளாக்.ஒன் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் பிரென்டேன் ப்ளூமெர் IOWA டேக்கன் விற்பனையின் மூலம் சுமார் 1 பில்லியன் டாலர் வரையிலான பணத்தை ஈட்டினார்.

இன்றைய நிலையில் இவரது கிரிப்டோ சொத்து மதிப்பு 600-700 மில்லியன் டாலாரக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

மைக்கெல் நோவோகிராட்ஸ்

மைக்கெல் நோவோகிராட்ஸ்

2013ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் துவங்கிய மைக்கெல் நோவோகிராட்ஸ், அதன் மீது அதிகளவில் ஈர்க்கப்பட்டுத் தான் செய்துகொண்டு இருந்த வேலையை விட்டுச் சென்றது, மட்டுமல்லாமல் முழு நேரமாக இதில் மட்டுமே முதலீடு செய்யத் துவங்கினார்.

பிரோக் பீர்ஸ்

பிரோக் பீர்ஸ்

பிட்காயின் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர், பிளாக்.ஒன்-இன் ஆலோசகராக இருக்கும் பிரோக் பீர்ஸ் மாஸ்டர்காயின், காயின்பேஸ், எதிரம் போன்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

இன்றைய நிலையில் இவரது கிரிப்டோ சொத்து மதிப்பு 700 மில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

அந்தோனி டி ஐரியோ

அந்தோனி டி ஐரியோ

எதிரம் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருக்கும் அந்தோனி டி ஐரியோ எதிரம் மட்டும் அல்லாமல் பல்வேறு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளார்.

இவரது மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 750 மில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

மேத்யூ ராசாக்

மேத்யூ ராசாக்

2011ஆம் ஆண்டுப் பிட்காயின் குறித்துத் தெரிந்துக்மகொண்டு முதலீடு செய்யத் துவங்கிய மேத்யூ ராசாக், பிளாக் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், டேலி கேப்பிடல் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
மேத்யூ ராசாக்

இவரது மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலர் வரையில் இருக்கும்.

 

பிரையன் ஆம்ஸ்ட்ராங்

பிரையன் ஆம்ஸ்ட்ராங்

2012ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய இருந்த ஒரே தளம் காயின்பேஸ் தான். இந்நிறுவனத்தின் சிஇஓவோ தான் பிரையன் ஆம்ஸ்ட்ராங்.

இவரது மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலர் வரையில் இருக்கும்.

 

மேத்யூ மெலென்

மேத்யூ மெலென்

தனிப்பட்ட முதலீட்டாளர்கள் பிரிவில் கிரிப்டோ மூலம் அதிகப் பணத்தைச் சம்பாதித்த ஒருவர் தான் மேத்யூ மெலென். இவர் தனது முதலீட்டை அதிகளவில் ரிப்பிள் நாணயத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளார்.

இன்றைய நிலையில் இவரது மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

கேம்ரான் & டைலெர் விங்கில்வாஸ்

கேம்ரான் & டைலெர் விங்கில்வாஸ்

பேஸ்புக் புகழ் கேம்ரான் & டைலெர் விங்கில்வாஸ் கிரிப்டோகரன்சியில் ஆரம்பம் முதலே அதிகளவிலான முதலீடு செய்து சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவில் சம்பாதித்துள்ளனர்.

சாங்பெங் சாவ்

சாங்பெங் சாவ்

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஜ் ஆகத் திகழும் பினான்ஸ் நிறுவனத்தின் சிஇஓதான் சாங்பெங் சாவ், இவரைச் சுருக்கமாக CZ என அழைக்கப்படுவார்.

இதுவரை இந்நிறுவனத்தின் 60 லட்சம் பேர் இணைந்து வர்த்தகம் செய்து வருகின்றனர். இவரது மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 1.1 -2 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

ஜோசப் லுபின்

ஜோசப் லுபின்

எதிரம் என்னும் மிகப்பெரிய வெற்றி பெற்ற கிரிப்டோகரன்சி உருவாக்கிய நிறுவனத்தின் துணை நிறுவனரான ஜோசப் லுபின் உள்ளார்.

இவரது மொத்த கிரிப்டோ சொத்து மதிப்பு 1 - 5 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

 கிரிஸ் லார்சென்

கிரிஸ் லார்சென்

ரிப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான கிரிஸ் லார்சென் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் மிகப்பெரிய பணக்காரராகத் திகழ்கிறார்.

மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது ரிப்பிள். கிரிஸ் லார்சென் மட்டும் சுமார் 5.2 பில்லியன் ரிப்பிள் டோக்கன்களை வைத்துள்ளார்.

அதேபோல் ரிப்பிள் நிறுவனம் சுமார் 61 பில்லியன் ரிப்பிள்களை நிர்வாகம் செய்து வருகிறது, தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 95 பில்லியன் டாலர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+