மும்பை: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 1.77 பில்லியன் டாலர் மோசடி செய்துள்ள தகவல்கள் வெளியானதை அடுத்து பங்குகளின் விலை 7.8 சதவீதம் வரை சர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பங்குகளின் மதிப்பு சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 3,000 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்
மும்பையினைச் சேர்ந்த ஒரு பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளையில் சில அங்கீகரிக்கப்படாதா பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகள் தங்களுக்குத் தெரிந்த சில வாடிக்கையாளர்களுக்கு அட்வான்ஸ் ஆக வங்கி அதிகாரிகள் அளித்துள்ளனர் என்றும் மும்பை பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி குறிப்பிட்டுள்ளது.
லாபம் சரிவு
பிப்ரவரி 6ம் தேதி மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட பஞ்சாப் நேஷ்னல் வங்கி எதிர்பார்த்ததை விடக் குறைவான வருவாயினைப் பெற்றுள்ளதாகவும் அதே நேரம் சொத்து மதிப்புகள் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. நிகர லாபமானது 11.1 சதவீதம் உயர்ந்து 230 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகம்
சர்வதேச வணிகத்தில் இருந்து 2017 டிசம்பர் மாதம் 11 கோடியினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மூன்றாம் காலாண்டில் வெளிநாட்டுக் கிளைகளில் 5.9 சதவீதம் டெபாசிட்கள் அதிகரித்து 6.48 லட்சம் கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 6.12 லட்சம் கோடியாக இருந்தது.
வரா கடன்
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில்12.11 சதவீதமாக இருந்த வரா கடன் மதிப்பீடு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 13.31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 7.55 சதவீதமாகக் குறைந்து இருந்தது.
நடவடிக்கை
வங்கி இந்த மோசடி குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இந்த மோசடிக்குத் துணை போனவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பங்கு சந்தை நிலவரம்
பிற்பகல் 12:32 மணி நிலவரத்தின் படி 7.05 சதவீதம் என 11.40 புள்ளிகள் சரிந்து 150.25 ரூபாய் ஒரு பங்கு எனப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
நிரவ் மோடி
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications