பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள 1.77 பில்லியன் டாலர் மதிப்பிலான மோசடி வெளிவந்துள்ளதை அடுத்து நிதி அமைச்சகம் அனைத்து பிற வங்கிகளின் நிலை குறித்த அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் செய்த 9,000 கோடி ரூபாய் மோசடியினை விட மிகப் பெரிய ஊழல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி
வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கான LOU உத்தரவாத முறையினை வங்கி அதிகாரிகள் உதவியுடன் மோசடியாகப் பயன்படுத்தி இவர் வெளிநாட்டு இந்திய வங்கி கிளைகளில் 2011-ம் ஆண்டு முதல் பெற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் மீது நடவடிக்கை
1.77 பில்லியன் டாலர் மோசடி என்பதால் 10 ஊழியர்களைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி இடைக்காலப் பணிநீக்கம் செய்துள்ளது.
பிற வங்கிகள் நிலை
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள இந்த மோசடியால் பிற வங்கி நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று நிதி அமைச்க செயலாளர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி அமைச்சகம் பிற வங்கிகளிடமும் நடப்பு நிலை அறிக்கையினை முடிந்த வரை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
புகார்
பஞ்சாப் நேஷ்னல் வங்கி நீராவ் மோடி மற்றும் மோசடியில் ஈடுபட்ட அவரது நிறுவனம் என இரண்டு புகார்களைச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் அளித்துள்ளது.
பழைய வழக்கு
ஏற்கனவே நீராவ் மோடி மீது 250 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வந்துள்ளது. தற்போது புதிய வழக்கும் இணைந்துள்ளதால் உலகப் புகழ் பெற்ற வைர வியாபாரியான இவருக்கு மிகப் பெரிய சிக்க எழுந்துள்ளது.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மோசடி செய்த முதலைகள் யாரும் தப்பிவிடக்கூடாது என்றும் அதே நேரம் நேர்மையான கடனாளிகள் பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications