பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ரூ.11,300 கோடி மோசடிக்கு யார் பொறுப்பு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீராவ் மோடி செய்த மோசடிகளுக்கு உத்திரவாதம் அளித்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி தான் எதிர் தரப்பு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 11,300 கோடி ரூபாய்க்கும் பெறுப்பேற்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளதாக இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய் மல்லையா வங்கிய கடனில் சிக்கித் தவித்து வந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு ஆர்பிஐ கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லையா செய்த மோசடியை விட இது மிகப் பெரியது.

சக வங்கிகள்

சக வங்கிகள்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடன் தற்போது நடைபெற்று வந்த கூட்டத்தில் சக வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய பணத்திற்கு யார் பொறுப்பு என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருமனதாகப் பஞ்சாப் நேஷ்னல் வங்கிதான் பொறுப்பேற்று வங்கிகளுக்கு அளிக்க வேண்டும் என்று முடிவும் செய்யப்பட்டுள்ளது. ஒருவேலை பஞ்சாப் நேஷ்னல் வங்கிக் கடனை திருப்பி அளிக்கவில்லை என்றால் பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடன் சேர்த்து 30 வங்கிகளுக்கு இது மிகப் பெரிய நட்டமாக மாறும்.

நட்டம்

நட்டம்

சக வங்கிகளுக்குப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி திருப்பி அள்ளிக்கும் போது இது மிகப் பெரிய நட்டமாக உறுவெடுக்கும், பிற வங்கிகளுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. இது குறித்து மத்திய வங்கிக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

தாமதம்
 

தாமதம்

பஞ்சாப் நேஷ்னல் வங்கி பணத்தினைத் தாமதமாக அளிக்கும் ஆனால் நிதி அமைச்சகம் இதில் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என்று சக வங்கிகள் கோரிக்கை வைத்துள்ளன.

மறுக்கும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி

மறுக்கும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி

அதே நேரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி நீராவ் மோடி மற்றும் கீதாஞ்சலி நிறுவனத்துடன் சக வங்கிகள் இணைந்து தான் இந்தப் பரிவர்த்தனையினை நடைபெற்றுள்ளது என்றும் அவர்களும் ஆர்பிஐ விதிகளை மீறியுள்ளதாகவும் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இதனைச் சக வங்கிகள் மறுத்துள்ளனர்.

 ஆர்பிஐ

ஆர்பிஐ

வங்கி ஊழியர்கள் தவறு செய்திருக்கும்பட்சத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தான் இதற்கு முழுப் பொறுப்பு என்றும் அவர்களால் இதனை மறுக்க முடியாது என்றும் ஆர்பிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஸ்விப்ட் குறியீடு

ஸ்விப்ட் குறியீடு

ஒருவேலை இந்தப் பரிவர்த்தனை ஸ்விப்ட் குறியீடு மூலம் நடைபெறாமல் இருந்தால் சக வங்கிகள் பொறுப்பேற்கலாம். ஆனால் நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஸ்விப்ட் டெஸ்ட் குறியீடு மூலமாகத் தான் பரிவர்த்தனை நடந்துள்ளதால் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

நீராவ் மொடி

நீராவ் மொடி

நீராவ் மோடிக்கும் நெருங்கிய வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்த போது அவர் 6,000 கோடி ரூபாயினை விரைவில் பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்குத் திருப்பி அளிக்க உள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who Is Liable To Pay For Rs 11,000 Crore Fraud At PNB?

Who Is Liable To Pay For Rs 11,000 Crore Fraud At PNB?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X