பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குப் பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகளினால் கடந்த சில வாரங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் பிப்.14ஆம் தேதி முதல் பிட்காயின், லைட்காயின் போன்ற முன்னணி கிரிப்டோகரன்சி தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இச்சந்தையில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள்ம மீண்டும் வந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

கடந்த 2 வாரத்தில் முதல் முறையாக நேற்றைய வர்த்தகத்தில் பிட்காயின் 10,000 டாலரைத் தாண்டியது.
இதன் மூலம் பிட்காயின் தொடர்ந்து உயரும் என்பது மட்டும் அல்லாமல் ஜூலை மாதத்திற்குள் இதுவரை பிட்காயின் எட்டாத உச்சத்தை அடையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் டோக்கியோ நகரத்தைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சான காயின்செக் தளத்தில் இருந்து 532.9 மில்லியன் டாலர் அளவிலான நிதி திருடப்பட்டது. இது இச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்தது.


Click it and Unblock the Notifications