வருமான வரி தாக்கலில் மோசடி செய்துள்ளதாகவும் அதனால் சிபிஐ இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் வெளிவந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் எங்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் சிபிஐ இது குறித்து எங்களைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வரி வருமான வரி தாக்கல்
திருத்தப்பட்ட வரி வருமான வரி தாக்கல் செய்து இன்ஃபோசிஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மோசடி செய்துள்ளதாகவும் அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
வருமான வரி துறை மற்றும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள்
வருமான வரி துறை அதிகாரிகள் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் சிலரும் ஒன்று சேர்ந்துகொண்டு இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் இல்லாத போலி பெயர்களில் பட்டய கணக்காளர்கள் என்று பதிவு செய்து 1,010 நபர்கள் திருத்தப்பட்ட வரி வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் அதில் 250 நபர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த மோசடி மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது தெரிய வந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
மும்பை பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து விசாரணை வியாழக்கிழமை மும்பை பங்கு சந்தை அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்ஃபோசிஸ்
மோசடி குறித்து ஊடகங்களில் வந்த தகவலை அடுத்த தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இது குறித்து தெரியவந்து என்றும், இதுவரை சிபிஐ அதிகாரிகள் யாரும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என்றும் வருமான வரி மோசடி பட்டியலில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
சிபிஐ
மோசடி நடைபெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் எங்களைத் தொடர்புகொண்டால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பினை நிர்வாகம் அளிக்கும் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் குறியுள்ளது.
பங்குகளின் நிலை
வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:02 மனி நிலவரத்தின் படி இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 7.30 புள்ளிகள் என 0.63 சதவீதம் உயர்ந்து 1,164 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications