வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியின் 2 மாத நாணய கொள்கை கூட்டம் நடந்தது, இதில் கிரிப்டோகரன்சி குறித்த அறிவிப்பில், இந்தியாவில் தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ கிரிப்டோகரன்சி வாங்க அல்லது விற்பனை செய்ய உதவும் வங்கி, ஈவேலெட், இதர பணப் பரிமாற்ற முறைகளுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை இந்தியாவில் இயங்கி வந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் நடுரோட்டில் நிற்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
2018-19ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டம் நேற்று நடந்து முடிந்தது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறைக்கவில்லை.
கிரிப்டோகரன்சி வர்த்தகம்
இதனுடன் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மூலம் மக்கள் ஏமாறக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குக் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்குச் சேவை அளிக்க முழுமையான தடை விதித்துள்ளது.
பணப் பரிமாற்ற
இதன் மூலம், இனி கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் எல்லா வழிகளையும் முடக்கியுள்ளது.
இணைய வங்கி சேவை மூலம் வர்த்தகத் தளத்தின் ஈவேலெட்-க்கு கூடப் பணப் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் எச்சரிக்கை
பட்ஜெட் அறிக்கை தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில், தற்போது ரிசர்வ் வங்கியும் இதன் மீதான வர்த்தகம் செய்ய வேண்டாம் என வங்கிகளுக்கு விடப்பட்டுள்ள தடைகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாடுகள்
இந்தியாவைப் போல வெளிநாடுகளிலும் கிரிப்டோகரன்சி மீது அதிகளவிலான வர்த்தகம் செய்யப்பட்டாலும், அரசின் கடுமையான கட்டுப்பாடுகள், விதிகள் மூலம் தொடர்ந்து அதன் மீதான வர்த்தகம் நடந்து தான் வருகிறது.
ஆனால் இந்தியாவில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் நாடு
சொல்லப்போனால் உலகிலேயே கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு மிகப்பெரிய அளவிலான தடையை விதித்துள்ள நாடு என்பால் இந்தியா தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications