வங்கி மோசடி எல்லாம் சும்மா.. மக்களை பயமுறுத்தும் வேலை.. ஆஷிஷ்குமார் சவுகான்..!

இந்திய வங்கிகள் நிதி நேறுக்கடியில் உள்ளது என்றும், மொசடியில் சிக்கி தவித்து வருகிறது என்பதெல்லாம் மக்களைப் பயமுறுத்தும் வேலை. நீரவ் மோடி செய்த மோசடியை 3 நாட்களில் மக்களிடம் இருந்து வட்டியாக வங்கி வசூலித்துவிடுகின்றன என்று மும்பை பங்கு சந்தையின் மூத்த அதிகாரி ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வைர வியாபாரியான நீரவ் மோடி இது வரை இல்லாத மிகப் பெரிய அளவில் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதற்காகச் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரண்டு முறை நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவருக்கும் ஜாமின் வாங்க முடியாத பிடிவாரண்ட் அளித்து உத்தரவிட்டுள்ளது.

பிஎன்பி மோசடி

பிஎன்பி மோசடி

எம்ஐடி மாநாட்டில் பங்கேற்று பேசிய சவுகான் இந்திய வங்கி துறை நல்ல நிலையில் தான் உள்ளது, ஏன் பஞ்சாப் நேஷன்ல் வங்கியில் நடந்துள்ள மோசடி பணத்தை எல்லாம் இந்திய வங்கிகள் ஒரு நாளில் வட்டி மூலமாகப் பெற்றுவிடும் என்று கூறியுள்ளார்.

 உதாரணம்

உதாரணம்

இந்திய வங்கி அமைப்பின் மொத்த மதிப்பு ஒரு கோடி கோடி என்றும் அண்டுக்கு 12% கடனுக்கான வட்டியாகப் பெறும் தொகை என்றால் ஒரு வருடத்தில் 12 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகள் பெற்று இருக்கும். இதனை வைத்துப் பார்க்கும் போது பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற மோசடி பணத்தினை இந்திய வங்கிகளுக்கு 3 நாட்களில் கிடைத்து இருக்கும்.

 வங்கி சீர்திருத்தங்கள்

வங்கி சீர்திருத்தங்கள்

1992-ம் ஆண்டே ஆர்பிஐ வங்கி மோசடியைத் தடுப்பதற்காகப் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. அதன் பிறகும் மோசடிகள் நடைபெறுகிறது என்றால் வங்கி அதிகாரிகள் செய்யும் தவறுகள் தான். அதற்காக எல்லாம் வங்கிகள் நிலை மோசமாக உள்ளது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மோசடி பணமும் வங்கிகளும்

மோசடி பணமும் வங்கிகளும்

வங்கிகள் நீரவ் மோடி ஓசதி செய்துவிட்டார் என்று கூறி அதனைப் பெரிது படுத்தி வருகின்றன. 10 வருடங்களாக இவர் மொசடி செய்துள்ளார் என்றால் வங்கிகளுக்கு அது 10-ல் ஒன்று, ஏற்கனவே இந்தப் பணத்தினை மக்களிடம் இருந்து ஏதோ ஒரு வகையில் திரும்பப்பெற்றுவிட்டு இருக்கும்.

வங்கிகள்

வங்கிகள்

இது போன்ற மோசடி விவகாரங்களை ஊதி பெருக்குவதன் மூலமாக வங்கி நிறுவனங்கள் கடன் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்துவது மற்றும் டெபாசிட்கள் மீதான வட்டி விகிதத்தினைக் குறைப்பது போன்றவற்றால் எளிதாகச் சம்பாதித்துவிடும் என்றும் எனவே வங்கிகள் மோசமான நிலையில் உள்ளது என்று கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் பாக்கெட்டினை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+