இந்தியாவில் டிஜிட்டல் கரன்சிகளான பிட்காயின், எதிரம், லையிட்காயின் போன்றவற்றின் வர்த்தகத்தை நிரந்தரமாகத் தடை செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முயற்சி செய்து வரும் நிலையில் ஜப்பான், சீனாவில் நடந்ததைப் போலேவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளம் ஹோக் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையத் திருட்டின் மூலம் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயின்செக்யூர்
டெல்லியை தலைமையாகக் கொண்டு இயங்கும் காயின் செக்யூர் என்னும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் வேலெட்டில் இருந்து பிட்காயின் திருடப்பட்டுள்ளதாகச் சைபர் செலில் இந்த நிறுவனம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமிதாப் சக்சேனா
காயின்செக்யூர் நிறுவனம் வழங்கிய புகாரில் இந்நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு தலைவரான அமிதாப் சக்சேனா இதைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகக் குற்றசாட்டியுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் சைபர் செல் மத்திய அரசை அமிதாப் சக்சேனா வழக்கம் போல் வெளிநாட்டுக்குத் தப்பிப் போகாமல் பாஸ்போர்ட்-ஐ முடக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
திருட்டு
காயின்செக்யூர் நிறுவனம் கொடுத்த புகாரின் படி அமிதாப் சக்சேனா என்பர் இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 438 பிட்காயின்களைத் திருடியுள்ளதாகவும் இதன் மதிப்பு 20 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 லட்சம் வாடிக்கையாளர்கள்
இந்நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் சிலர் மட்டும் தங்களது பிட்காயின்களை ஆப்லைனில் சேமித்து வைத்துள்ளனர். இவர்களின் காயின்கள் மட்டுமே தற்போது திருடப்பட்டுள்ளது.
இந்தக் காயின்களின் பிரைவேட் கீ மற்றும் பாஸ்வோர்டுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இதுவே ஹேக் செய்ய வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications