மத்திய பொருளாதார விவகாரத் துறைக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மே 2) நடைபெற்றது. 2017-18ம் ஆண்டுச் சர்க்கரை ஆலைகள் பிழிவதற்காக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5.50 என்ற அளவில் நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் தர வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தலாம்.
இது குறித்த விவரம்:
1) சர்க்கரை ஆலைகள் சார்பில் அரசே விவசாயிகளுக்கு நேரடியாக நிதியை வழங்கும்.
2) விவசாயிகளுக்குத் தரவேண்டிய முந்தைய ஆண்டு நிலுவைத் தொகையுடன் கரும்பு கொள்முதல் விலையில் அந்த நிதி ஈடு செய்யப்படும்.
3) அதன் பிறகும் ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தால், அது சர்க்கரை ஆலைகளின் கணக்கில் செலுத்தப்படும்.
4) அரசு முடிவு செய்யும் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யும் சர்க்கரை ஆலைகளுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படும்.
நியாயமான விலை
சர்க்கரைக்குச் சீரான, நியாயமான விலை தொடரும் வகையிலும் சர்க்கரை ஆலைகளில் பணப்புழக்கம் சீராக இருக்கும் வகையிலும் கரும்புக்கு விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை விலையைச் செலுத்தவும் கீழ்க்கண்ட முடிவுகளைக் கடந்த மூன்று மாதங்களாக அரசு மேற்கொண்டு வருகிறது.
இறக்குமதி சர்க்கரை மீதான சுங்க வரி உயர்வு
விவசாயிகளின் நலனுக்காக இறக்குமதி சர்க்கரை மீதான சுங்கத் தீர்வை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரித்தல்.
2018ம் ஆண்டுப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளை மீட்பதன் உச்ச வரம்பை மாற்றுவது.
ஏற்றுமதி
சர்க்கரை ஆலைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகச் சர்க்கரை ஏற்றுமதியின் மீதான சுங்க வரியை அரசு முழுமையாக விலக்கிக் கொண்டது.


Click it and Unblock the Notifications