எங்களை வார்த்தையில் நோகடிக்காதீர்கள்.. புல்வாமா தாக்குதலில் பலியான குருவின் மனைவி உருக்கம்..

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா தாக்குதலில் 44 மத்திய ரிசர்வ் படை போலீஸார் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலால் கொல்லப்பட்டார்கள்.

 

மொத்த இந்தியாவுமே கலங்கியது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடியும் கொடுத்தது. இன்னொரு பக்கம் புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்துக்கு கல்விச் செலவுகளை அம்பானி ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

அம்பானி தொடங்கி சாதாரன மனிதர்களை தங்களால் முடிந்ததை நாட்டைக் காக்க உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு கொடுத்து உதவி முன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

[Read more: பெல் நிறுவனம் 15வது ஆண்டாக 40% டிவிடெண்ட் வழங்கி சாதனை - முதலீட்டாளர்களுக்கு லாபம்]

குரு

குரு

புல்வாமா தக்குதலில் உயிர் துறந்தவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த குரு என்பவரும் ஒருவர். இவருக்கு சில வருடங்கள் முன்பு தான் திருமணம் ஆனது. ஆகையால் குருவின் மனைவிக்கு கர்நாடக அரசு, இன்ஃபோசிஸ் தொடங்கி பள்ளிக் குழந்தைகள் வரை தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரணத் தொகைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்ப பிரச்னை

குடும்ப பிரச்னை

ஒரு கட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாய் வரை குருவின் மனைவி கலாவதியின் வங்கிக் கணக்கில் பணம் குவிந்துவிட்டதாம். இதைப் பார்த்த குருவின் குடும்பத்தினர், குருவின் தம்பியை திருமணம் செய்து கொள்ளுமாறு கலாவதியை வற்புறுத்தி வருகிறார்களாம்.

ஏன்..?
 

ஏன்..?

குரு உயிரோடு இருந்து ஓய்வு பெறும் வரை சம்பாதித்திருந்தால் கூட இவ்வளவு பணம் பார்த்திருக்க முடியாது. இப்போது குருவின் உயிர்த் தியாகத்துக்கு இத்தனை கோடி (10 கோடி) ரூபாய் கொடுத்து அரசாங்கமும், மக்களும் உதவி இருக்கிறார்கள். இந்த பணத்தை தங்கள் குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனையில் தான் குருவின் தம்பியை திருமணம் செய்து கொள்ளுமாறு கலாவதியை குருவின் குடும்பமே வற்புறுத்துகிறதாம்.

ஏத்தி விடு ஓம்பாட்டுக்கு

ஏத்தி விடு ஓம்பாட்டுக்கு

கலாவதியின் பூர்வீகமான குடிகேரி பகுதிகளில் கலாவதிக்கு நன்கொடைகள் மூலமாக சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்திருப்பதாகவும், கலாவதிக்கும், கலாவதியின் மாமியார் (குருவின் அம்மாவும்) மேலே சொன்ன படி பிரச்னை நடந்து கொண்டிருப்பதாகவே பேசு வருகிறார்களாம். குடிகேரி பகுதி எல்.எல்.ஏ மற்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் டி சி தம்மன்னாவும் கோடிக் கணக்கில் கலாவதிக்கு நன்கொடைகள் வந்து கொண்டிருப்பதை உறுதி செய்கிறார்.

குடும்பத்தினர்

குடும்பத்தினர்

கலாவதிக்கு மிக நெருங்கிய சொந்த பந்தங்கள் கலாவதிக்கு கிடைத்திருக்கும் பணத்தைக் குறித்து பேசுகிறார்கள். "கலாவதிக்கு இதுவரை சுமார் 7 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பது உண்மை தான். ஆனால் இதுவரை கலாவதி அந்த ஏழு கோடி ரூபாயில் ஒரு ரூபாயைக் கூட எடுத்து பயன்படுத்தவில்லை" எனவும் சொல்லி இருக்கிறார்.

கலாவதி பதில்

கலாவதி பதில்

மேலே சொன்ன பிரச்னைகளைக் குறித்து கலாவதியிடம் கேட்ட போது "எங்களை தயவு செய்து செய்தி சுவாரஸ்யத்துக்காக பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். என் வங்கிக் கணக்கில் எனக்கு எவ்வளவு ரூபாய் நன்கொடையாக வந்திருக்கிறது எனத் தெரியவில்லை. அதில் என் கவனமும் இல்லை. என் கணவர் இறந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் எங்கள் திருமண உறவையும், என் கணவர் குடும்பத்தையும் கொச்சைப் படுத்தும் விதத்தில் பேசி எங்களை நோகடிக்காதீர்கள். என் கொழுந்தனாரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி என்னை யாரும் வற்புறுத்தவில்லை" என திட்ட வட்டமாக மறுத்திருக்கிறார்.

மக்களே..?

மக்களே..?

குடிகேரி பகுதி மக்கள் ஏதோ ஒன்றை விளையாட்டுத் தனமாகச் சொல்லப் போய், இன்று அது ஒரு சீரியஸான பிரச்னையாக உருவெடுத்து விட்டது என அப்பகுதி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் சொல்லி இருக்கிறார். உண்மையில் கோடிக் கணக்கில் அவரின் வங்கிக் கணக்கில் பணம் வந்து கொண்டிருப்பது உண்மை தான். ஆனால் குருவின் குடும்பம் கலாவதியை மறு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதே ஒரு பெரிய பொய். எனவே தயவு செய்து இந்த் அபொய்ச் செய்திகளை யாரும் பறப்ப வேண்டாம் என குடிகேரி பகுதி காவல் துறையினரும் கேட்டுக் கொண்டனர்.

அறிவிப்பு

அறிவிப்பு

கர்நாடகஅரசு 25 லட்சம் ரூபாய், இன்ஃபோசிஸ் அமைப்பு 10 லட்சம் ரூபாய், அரசியல் கட்சிகள் கொடுத்த நன்கொடை 1 கோடி ரூபாய், ஒரு வெளிநாட்டு கன்னட பிசினஸ்மேன் 1 கோடி ரூபாய் என நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். , சமீபத்தில் இறந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா 20 குண்டாஸ் (0.5 ஏக்கர்) நிலம் தருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் எத்தனையோ கர்நாடக பள்ளிகளில் இருந்து மக்கள் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து தங்கள் முடிந்த வரை பணத்தை வசூல் செய்து கலாவதியிடம் கொடுத்து வருகிறார்களாம்.

நன்றி

நன்றி

என் கணவருக்கு இந்த நாட்டு மக்கள் காட்டு அன்பு இணையற்றது. அவர் தியாகத்தை நம் நாட்டவர்கள் பெருமையோடு நினைக்கிறார்கள் எனப்தை நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. அதோடு மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எங்களுக்காக, என் கணவரின் தியாகத்துக்காக கொடுப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு நன்றி. ஆனால் ஒரு சிலரின் தவறான செய்திகளை நம்பி என் கணவர் குடுபம் பணத்துக்காக என்னை மறு மணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள் என்கிற விஷயத்தை பரப்பி வருகிறார்கள். அது உடைந்து போய் இருக்கும் என் கணவரின் பெற்றோரை மேலும் காயப் படுத்துகிறது. எனக்கும் என் கணவருக்குமான உறவை கொச்சைப் படுத்துவது போல் இருக்கிறது. எனவே தயவு செய்து இப்படியான தரக் குறைவன செய்திகளை பரப்ப வேண்டாம் என கெஞ்சிக் கேட்டுள்ளார் கலாவதி.

அவர் உணர்வுக்கு மரியாதை கொடுப்போம். போலி செய்திகளை தவிர்ப்போம்.

[Read more: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 5 ஆண்டு வருமானவரி கணக்கை சமர்பிக்க உத்தரவு - பான் கட்டாயம்]

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

is gurus wife kalavathy forced to marry her husbands younger brother for money

is gurus wife kalavathy forced to marry her husbands younger brother for money
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X