உஷார் மக்களே.. வங்கி முகவரியை மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்

டெல்லி : டெல்லி சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒரு பெண் போலியான கையெப்பம் மூலமும், ஏடிஎம் மற்றும் காசோலை மூலமாக 3.62 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளாராம். அதற்காக அவர் அந்த செக் உரிமையாளரின் முகவரி முதல் கொண்டு ஒரே மாதிரியாக கூறியுள்ளார் அம்மணி...

அட ஆமாப்பு.. நம்ம டெல்லியில் உள்ள துவாராகவில் உள்ள, உத்தம் நகரில், விபின் கார்டனில் குடியிருக்கும் ஒரு பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

அதோடு தனது வங்கிக் கணக்கிலிருந்து செக் புக் ஏ.டி.எம் கார்டுகள் மூலமாக 3.62 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் தன்னிடம் செக் லீப்போ ஏடிஎம் எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார். அதோடு தான் பல மாதங்களுக்கு முன்பு வங்கியில் இதற்காக அப்ளை செய்திருந்ததாகவும், ஆனால் இதுவரை எதுவும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

உங்க செக்-லீப் நாங்க ஒன்னும் பண்ண முடியாது?

உங்க செக்-லீப் நாங்க ஒன்னும் பண்ண முடியாது?

அதோடு வங்கியில் சென்று பாதிக்கப்பட்ட பெண் கேட்டபோது, வங்கியின் மூத்த அதிகாரிகள் உங்களது காசோலை மூலமாகவும், ஏடிஎம் மூலமாகவும் தான் பணம் திருடப்பட்டுள்ளது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்துள்ளனர்.

கொரியரோ வரவில்லை?

கொரியரோ வரவில்லை?

ஆனால் புகார் அளித்த அம்மணியோ கடந்த டிசம்பர் மாதத்தில் தான் காசோலை புத்தகத்திற்கும் ஏடிஎம் கார்டுக்கும் அப்ளை செய்துள்ளார். ஆனால் இது வரை அவர் வங்கியிலிருந்து அப்படி எந்த ஒரு கொரியரையும் பெறவில்லை என்று வாதாடியிருக்கிறார்.

எங்கேயோ தப்பு நடக்குது?

எங்கேயோ தப்பு நடக்குது?

அப்பதான் நம்ம அம்மணிக்கு புரிஞ்சிருக்கு, ஒகே நம்ம மக்கள் தான் யாரோ ஆட்டைய போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கு. அதோடு துவாராகாம் உத்தம் நகரில் உள்ள யாரோ ஒருவர் தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்றும் புரிஞ்சுகிட்டுருக்கிறார்.

கொரியர் பையனிடம் விசாரணை

கொரியர் பையனிடம் விசாரணை

வங்கியிலிருந்து கொரியர் அனுப்பப்பட்டதாக கூறிய கொரியர் நம்பரை வாங்கி, விசாரித்த போது ஒரு வழியாக கொரியர் பையனையும் பிடித்தாகி விட்டது. இந்த நிலையில் அவனிடம் விசாரிக்கும் போதுதான் தெரிஞ்சிருக்கிறது. பையன் தப்பான அம்மணியிடம் கொரியை கொடுத்ததும், அதை அந்த அம்மணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதும் தெரிய வந்திருக்கிறது.

அதே முகவரி

அதே முகவரி

அட ஆமாங்க.. அந்த கொரியைப் பெறுவதற்காக அம்மணி, உண்மையான கொரியருக்கும் சொந்தமானவர் பெயரை கூறியுள்ளாரார் தில்லாங்கடி அம்மணி. இது குறித்த நம்ம துவாரக போலிசார் களத்தில் இறங்கி விசாரிக்கும் போது தான் தெரிய வந்துள்ளது. வங்கியில் அக்கவுண்ட் செய்த பெண், இதற்கு முன்பு வாடகை வீட்டில் இருந்த முகவரியை கொடுத்திருப்பது. இதுவரை அந்த முகவரியை வங்கியில் மாற்றம் செய்யவில்லை என்றும். அந்த துரதிஸ்டவசமான வீடு, மோசடி செய்த அம்மணி இப்ப அதே வீட்டில் இருக்காங்கன்னு தெரிஞ்சுருக்கு.

பேலன்ஸ் மெசேஞ் வந்தாலும் தெரிவதில்லை

பேலன்ஸ் மெசேஞ் வந்தாலும் தெரிவதில்லை

49 வயதான அந்த பெண்ணின் கையெப்பம் முதல் கொண்டு எப்படி போடுவது என்று தெரிஞ்சு வச்சிருக்கிறார் இந்த தில்லாங்கடி. இதில் முக்கிய வேடிக்கை என்னவெனில் வங்கிக் கணக்கில் கொடுத்திருந்த மொபைல் எண்ணும் தற்போது உபயோகத்தில் இல்லை. ஆக தில்லாலங்கடி அம்மணி ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போது மெசோஜும் பார்ப்பதற்கு வழியும் இல்லை. கொரியர் பையன் கொரியர் வந்திருக்கு என்று கூப்பிடவும் வழியில்லை.

ஷாப்பிங் அமக்களம்

ஷாப்பிங் அமக்களம்

இந்த தில்லாங்கடி அம்மணி ஆரம்பத்தில் ரூ.50,000 பனத்தை சேம்பிள்லுக்கு முதலில் செக் லீப் மூலம் எடுத்திருக்கிறார். அதில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவே, அடுத்தடுத்து நான்கு முறை இதே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதோடு ஏடிஎம் மூலம் சுமார் ரூ97,000 வரை பணம் எடுத்துள்ளார். அதோடு இதில் ஷாப்பிங் மூலம் 15,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

எதற்கு இந்த அசிங்கம்?

எதற்கு இந்த அசிங்கம்?

பாதிக்கப்பட்ட பெண்னின் அக்கவுண்டிலிருன்து ரூ.3.62 லட்சம் எடுக்கப்பட்டு பின்னர், அந்த அம்மணி எப்படியோ மானம் போயிடுமேன்னு அடிச்சு பிடிச்சு கடன வாங்கி டெபாசிட் பண்ணி இருக்கார். அதோடு செக் லீப், ஏ.டி.எம் கார்டு எல்லாத்தையும் திரும்ப பாதிக்கப்பட்ட பெண்னிடமே திரும்ப கொடுத்து விட்டாராம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+