சென்னை: பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இனி இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி, தசரா, தீபாவளி, நவ ராத்திரி, கிறிஸ்துமஸ், பொங்கல், மகர சங்கராந்தி என ஓரே திருவிழா கோலமாகத் தான் இருக்கும்.
இங்கு என்ன ஒரே பிரச்னை என்றால், இப்போது தான் கல்யாண சீசனும் அதிகமாக இருக்கும். இயல்பாக தங்கம் வாங்குவதற்கான நெருக்கடியும் மிகவும் அதிமாக இருக்கும்.
ஏற்கனவே சர்வதேச காரணிகளால் தங்க விலை செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது இப்போது இது போன்ற விசேஷங்கள் வந்தால் விலை ஏற்றத்தை தடுக்கவே முடியாதே..! அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக செப்டம்பர் 03, 2019 அன்று 40,352 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகபட்சமாக செப்டம்பர் 03, 2019 அன்று 37,020 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இது இரண்டுமே கடந்த சில வருடங்களில் இல்லாத புதிய உச்ச விலையை நோக்கி ஓடிக் கொண்டு இருப்பதைக் காட்டுகிறது.
ஒரே மாதத்தில்
கடந்த ஆகஸ்ட் 01, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 36,160. ஆனால் இன்று செப்டம்பர் 03, 2019-ல் அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,352 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் சுமாராக 11.5 சதவிகிதம் விலை அதிகரித்து இருப்பதை பார்த்து கவலைப் பட வேண்டி இருக்கிறது.
தனி நபர் கடன்
24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை வித்தியாசத்தை, கொஞ்சம் ரூபாயில் கணக்கிட்டால் சுமார் 4,200 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. ஆக ஆகஸ்ட் 01, 2019 அன்று ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை 28,928. அதுவே இன்று 32,280 ரூபாய்க்கு விற்கிறது. ஆக அதே ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை 3,352 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. இப்படி விலை ஏறினால் அடுத்து வரும் திருமணங்களில் தங்கம் வாங்குவதற்கே தனியாக தனி நபர் கடன் வாங்க வேண்டி இருக்கும் போல் இருக்கிறதே..? சரி விலை ஏற்றம் காரணங்களைப் பார்ப்போம்
விலை ஏற்றக் காரணிகள்
நம் ஆர்பிஐ போல பல உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தான் அந்த புதிய வாடிக்கையாளர்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கிக் குழுமம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவின்
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, சீனாவின் மக்கள் வங்கி, ரஷ்யாவின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் ரஷ்யா, துருக்கி நாட்டின் சென்ட்ரல் பேங்க் ஆஃப் ரிபப்ளிக் ஆஃப் டர்க்கி... போன்ற பல உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி வரும் காலங்களில் அதிக அளவில் தங்கத்தை வாங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கரன்ஸி விலை மாற்றம்
தற்போது உலக பொருளாதார சூழலில், வளரும் நாடுகளின் கரன்ஸி ஒரு மோசமான, நிலையற்ற தன்மையிலேயே வர்த்தகமாகி வருகிறது. எனவே துருக்கி, கஜகஸ்தான், சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களின் முதலீடுகளை பன்முகத் தன்மை உடன் மாற்றி அமைத்துக் கொள்ள தங்கம் உதவும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி மத்திய வங்கிகள் மட்டும் சுமார் 650 டன் வரை இன்னும் அதிக தங்கத்தை வாங்கலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
அதிக குவிப்பு
தற்போது மத்திய வங்கிகள், தங்கத்தில் முதலீடு செய்வது மிக முக்கிய விஷயமாக உலக சந்தைகளில் பார்க்கப்படுகிறது. தங்கம் கடந்த 2013-ம் ஆண்டு தொட்ட உச்ச விலையை, தற்போது மீண்டும் தொட்டு இருக்கிறது என்றால் அதற்கு மத்திய வங்கிகள் தங்கத்தை தாறுமாறாக வாங்கியதும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நொடி வரை தங்கத்தில் முதலீடு செய்வதை மத்திய வங்கிகள் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கம் விலை ஏறுவதும் தடை பட்டதாகத் தெரியவில்லை.
பொருளாதார காரணிகள்
உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி சரிவு, வர்த்தகப் போர் தொடர்பான கொந்தளிப்புகள், அமெரிக்க டாலரில் இருக்கும் பணத்தை தங்கத்துக்கு முதலீடு செய்து ரிஸ்கை குறைத்து, லாபம் பார்க்க நினைப்பது என தங்க விலை ஏற்றத்துக்கு பெரிய அளவில் உதவிக் கொண்டு இருக்கிறார்கள். உலகின் மொத்த தங்க நுகர்வில் 10 சதவிகிதத்தை பல நாட்டு மத்திய வங்கிகள் தான் வாங்கிக் குவித்து இருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரேலியா மற்றும் நியூலிலாந்து வங்கிக் குழும அறிக்கை.
சீனா வாங்கலாம்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் மொத்த அந்நிய செலாவணி ரிசர்வ்களில் வெறும் 3 சதவிகிதத்தை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்து வைத்து இருக்கிறார்களாம். சீனாவிடம் தற்போது 1,936 டன் தங்கம் இருக்கிறது. ஆக தன் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சீனா இன்னும் நிறைய தங்கம் வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறது அந்த அறிக்கை. சமீபத்தில் கடந்த ஜூலை 2019-ல் தான் சீனா தன் தங்க முதலீட்டை கொஞ்சம் அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இனியும் வாங்குவோம்
2019-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சுமாராக 375 டன் தங்கத்தை வாங்கிக் குவித்து இருப்பதாக உலக தங்க கவுன்சிலில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது. இந்த 375 டன் தங்கத்தை வாங்கியதற்கே தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. இனி வரும் மாதங்களிலும் தங்கத்தை வாங்க உலக மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டுவதாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஆக அடுத்த 12 மாதங்களில் தங்கத்தின் விலை இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ தெரியவில்லை..!
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications