தங்கம் விலை சரிவா..? அதுவும் 2,230 ரூபாய் குறைவா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பொருளாதாரமே ஒரு பெரிய சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது உலக சந்தைகளில் நிலவும் மந்த நிலைக்கு மத்தியில், இன்று இந்திய சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி, விலை உயரப் போராடின.

சென்னையில் 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 28,360 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றனவாம். நேற்று இதே 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 28,704 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது.

இப்படியாக ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டு இருக்கிறது. அப்படி என்ன பெரிய சரிவைக் கண்டு விட்டது..? வாங்கள் பார்ப்போம். முதலி விலை ஏற்றத்தில் இருந்து தொடங்குவோம்.

 முதல் ஏற்றம்
 

முதல் ஏற்றம்

கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.

இரண்டாவது ஏற்றம்

இரண்டாவது ஏற்றம்

பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 29.7 % ஏற்றம் கண்டு இருக்கிறது. ஏன் இவ்வளவு பெரிய ஏற்றம் கண்டது..? பிறகு ஏன் இப்போது தங்கத்தின் விலை குறைந்து வருகிறது..? எனக் கேட்கிறீர்களா..?

காரணங்கள் என்ன

காரணங்கள் என்ன

உலக பொருளாதார மந்த நிலை, ரெசசன் பயம், வட்டி விகித பிரச்னைகள் என பல காரணிகளால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறியது. ஆனால் அடிப்படையாக தங்கத்தை வாங்கிப் பயன்படுத்த இந்தியாவில் ஆள் இல்லை என்றால் விலை சரியத் தானே செய்யும். அது தான் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட, போதுமான வியாபாரம் இல்லாததால் நகைக் கடை உரிமையாளர்கள் பலரும், ஒரு பிரமாதமான தள்ளுபடி கொடுத்து தான் தங்கள் வியாபாரத்தைச் செய்ததாக செய்திகளே வெளியானது குறிப்பிடத்தக்கது. இனி விலை குறைவைப் பார்க்கலாம்.

எவ்வளவு குறைந்து இருக்கிறது
 

எவ்வளவு குறைந்து இருக்கிறது

இந்த 2019-ம் ஆண்டிலேயே செப்டம்பர் 04, 2019 அன்று தான் தங்கம் தன் உச்ச விலையைத் தொட்டது. செப்டம்பர் 04, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 41,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 37,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 39,050 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 35,450 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

விலை குறைவு

விலை குறைவு

ஆக 10 கிராம் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 2,020 ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது. அதே போல 10 கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 2,230 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. எனவே மக்களே தங்கம் வாங்குவதாக இருந்தால் இன்னும் கொஞ்சம் கூட காத்திருந்து, விலை போக்கை கவனித்துப் பார்த்து வாங்குங்கள். அவசரப்பட்டு தங்கத்தில் பணத்தை லாக் செய்து விட வேண்டாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price: For 10 gram 22 carat price cool down to Rs 35450 reduce 2230

Gold 10 gram 22 carat price reduced to 35,450 from 37,680. Gold 10 gram 22 carat price reduced to 39,050 from 41,070.
Story first published: Tuesday, October 1, 2019, 11:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more