இந்த வாரத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. அதுவும் ஏப்ரல் 22-ஆம் தேதி என்று கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,000-த்தை கடந்தது. உலகளாவிய பொருளாதார நிச்சயற்றத் தன்மை, டாலரின் மதிப்பு குறைந்தது போன்ற காரணங்களினால் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்பினர். இதுதான் தங்கம் விலை உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை அதிக அளவில் வாங்குகின்றன. அதோடு புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற பிற விஷயங்களும் சேர்ந்து தங்கத்தின் விலை உயர்வுக்கு மீண்டும் ஒருமுறை பங்களித்துள்ளன. தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது. டாலரின் மதிப்பு குறைய குறைய முதலீட்டாளர்கள் தங்கத்தை மிகவும் மதிப்புமிக்க உலோகமாக கருதத் தொடங்குவார்கள்.

மேலும் அமெரிக்கா சீனா வர்த்தகப் போர் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி அதிக அளவில் திரும்பினர். இதுவும் தங்கம் விலை அதிகரித்ததற்கு காரணமாக அமைந்தது.
கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான உதய் கோடக், தங்கத்தின் மீது இல்லத்தரசிகள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாராட்டினார். காலப்போக்கில் தங்கத்தின் செயல் திறன் அதிகரித்து வருகிறது. இந்திய இல்லத்தரசிகள் உலகின் மிகச்சிறந்த நிதி மேலாளர்கள் என்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
"ரிச் டாட் புவர் டாட்" என்ற புகழ்பெற்ற நிதி நூலின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, தங்கத்தின் எதிர்கால விலை குறித்து ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா விரைவில் பெரிய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் தேசிய அளவிலான கடன்கள் அமெரிக்காவில் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளதாகவும், வேலையின்மை அதிகரித்து வருவதாகவும், ஓய்வூதிய நிதிகளின் மதிப்பு குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதோடு 2035-ஆம் ஆண்டுக்குள் தங்கம் 30,000 டாலரை தாண்டும் என்றும் அவர் கணித்துள்ளார். இது இந்திய மதிப்புக்கு ரூ. 2561917.27 இருக்கும். அதோடு தங்கம் வெள்ளி மற்றும் பிட்காயினில் முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளார். 2030-ம் ஆண்டுக்குள் வெள்ளி 3000 டாலரை எட்டும் என்றும், பிட்காயின் 1 மில்லியன் டாலரை எட்டக் கூடும் என்றும் கணித்துள்ளார்.
நிபுணர்களின் கருத்துக்கணிப்புக்கு ஏற்ப தான் தங்கம் விலையில் சமீப காலமாக ஏற்றம் இருந்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் இன்று வரையில் ஏற்றத்தை தான் அதிக அளவில் கண்டுள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில்ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை 5.82 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நிபுணர்கள் சொல்வது போல தங்கம் விலை 2030-க்குள் ரூ.1 லட்சத்தை எட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications