இந்த காலத்தில் படித்த படிப்புக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு கிடைப்பதே பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படியே அந்த வேலை கிடைத்தாலும் எந்த நேரமானாலும் அந்த வேலை பறி போகலாம் என்ற ஒரு சூழலை ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை உருவாக்கியிருக்கின்றன. இந்த சூழலில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கும்போதே கணிசமான நிதி தொகுப்பை உருவாக்கி விட வேண்டும் என்றுதான் பலரும் எண்ணுகின்றனர்.
ஒரு இளைஞர் 24 வயதிலேயே ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார். இதற்கு அவர் எடுத்து கொண்டது வெறும் ஆறு ஆண்டுகள் தான். அது எப்படி என்பதை அவரே தன்னுடைய ரெட்டிட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டில் இருந்து 2026 வரையிலான இந்த ஆறு ஆண்டுகளில் தான் 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாக தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டிலேயே படித்து கொண்டிருக்கும்போதே சிறு சிறு ஃபிரீலன்ஸிங் வேலைகளை செய்ய தொடங்கியதாக கூறியிருக்கிறார்.

லோகோ வடிவமைப்பது, விசிட்டிங் கார்டு வடிவமைத்து கொடுப்பது என வேலை தொடங்கிய அவர் 2021 ஆம் ஆண்டில் ஃபிரீலன்ஸிங் செய்து 28,000 ரூபாய் வருமானமாக ஈட்டியதாக தெரிவித்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு கிளைன்ட் இவருக்கு லோகோ மற்றும் மெனு கார்டுகள் உருவாக்கி தந்து 50,000 ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறார். அதிலிருந்து தன்னுடைய வெற்றி பயணம் தொடங்கியதாக இந்த இளைஞர் பதிவு செய்திருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு ஐரோப்பிய கம்பெனியில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததாக தெரிவித்திருக்கிறார். வேலையில் படிப்படியாக உயர்ந்து மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபராக உயர்ந்திருக்கிறார். 2024ஆம் ஆண்டில் இவருக்கு 100 சதவீத சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது. அந்த ஓராண்டில் மட்டும் இவர் 26 இலட்சம் ரூபாய் வருமானம் பார்த்திருக்கிறார்.
இதனை அடுத்து 2025 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து நிறுவனங்களுக்கு மாறிய இவர் ஒவ்வொரு நிறுவனம் மாறும்போதும் 50 சதவீத சம்பள உயர்வுடன் தான் மாறுவதாக கூறியிருக்கிறார். தற்போது தன்னுடைய சொத்து மதிப்பு 63.5 லட்சம் ரூபாய் என்றும் தனக்கு எந்த ஒரு கடனும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
15 லட்சத்தில் கார் வாங்கி இருப்பதாகவும் பைக், ஐபோன், ஐபேட் , விலை உயர்ந்த கணினி ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த செலவுகளை செய்யாமல் இருந்திருந்தால் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருந்திருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தன்னுடைய இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தன் மீது தான் வைத்த நம்பிக்கை, இரண்டாவது என்னவாக இருந்தாலும் தினமும் தவறாமல் என்னுடைய வேலையை செய்வேன், புதுப்புது திறன்களை கற்றுக் கொள்வேன் என கூறியிருக்கிறார்.
நிறுவனங்களுக்கு ஒரே ஒரு திறன் கொண்ட நபர்கள் தேவைப்படுவது கிடையாது பல திறன்களை கொண்ட நபராக இருந்தால் உங்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து உங்களை தக்கவைக்க எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கும் என கூறியிருக்கிறார்.
தான் ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பராக மட்டுமில்லாமல் டிசைனிங் , மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் இருந்ததே குறுகிய காலத்திலேயே இவ்வளவு பணம் சம்பாதிப்பதற்கு உதவியதாக தெரிவித்திருக்கிறார். இளைஞர்கள் தங்களை பல திறன் கொண்டவராக அப்டேட் செய்ய வேண்டும், அடுத்தடுத்த ஊதிய உயர்வுடன் நிறுவனங்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டும் என்பதே இவர் கூறும் யோசனை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

