வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்து பலருக்கும் முன் உதாரணமாக இருக்கும் ஒரு நடிகை சமந்தா. இதனால் தான் சமந்தாவுக்கு ஆண் ரசிகர்களுக்கு நிகரான பெண் ரசிகர்களும் இருக்கின்றனர்.
சமந்தா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் சிறந்த தொழில்முனைவோராகவும் திகழ்கிறார். நடிப்பை தாண்டி தொழில்களிலும் முதலீடு செய்து அதில் லாபமும் பார்த்து வருகிறார். அந்த வகையில் நடிப்பை தாண்டி தொழில் வாழ்க்கை தன்னை எவ்வாறு செதுக்கியது என்பது குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

சமந்தா ரூத் பிரபு, ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய போது, தன்னுடைய முதல் வணிக முயற்சி தோல்வியில் முடிந்தது ஆனால், அந்த தோல்விதான் தனது வெற்றிகளை விட தனக்கு அதிக பாடங்களை கற்றுக்கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எனது முதல் வணிக முயற்சி தோல்வியடைந்தது, அது வேலை செய்யவில்லை, நீங்கள் முதலீடு செய்யும் முதல் திட்டம் தோல்வியடைவது உண்மையில் ஒரு நல்ல விஷயம், ஏனெனில் வெற்றியை விட தோல்வி உங்களுக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும் என கூறியுள்ளார்.
தனது வாழ்க்கை வெற்றிகளை விட தோல்விகளிலிருந்து தான் உருவானது என கூறியுள்ள சமந்தா முதல் வணிகத்தில் கிடைத்த தோல்வி தான் தன்னுடைய பிற்கால முதலீடுகள் மற்றும் வணிக முடிவுகளை எடுக்கும் முறையை முற்றிலும் வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நம் நாட்டில் ஆண்களை விட ஒரு தொழிலில் களமிறங்குவதற்கு பெண்களிடம் அதிக பயம் இருக்கிறது அதனை கைவிட்டு அனைவரும் வெளியே வர வேண்டும் என கூறியுள்ளார்.
இதனாலே தனக்கு பெண் நிறுவனர்களுடன் இணைந்து வேலை செய்ய அதிக விருப்பம் என கூறியுள்ள சமந்தா, நான் இதுவரை முதலீடு செய்துள்ள 8 முதல் 10 வணிகங்களில், 8 வணிகங்கள் பெண் நிறுவனர்களை கொண்டவை. எனவே, பெண்களுடன் இணைந்து நெருக்கமாக வேலை செய்வது எனக்கு ஒரு புதிய கற்றல் அனுபவமாக இருக்கிறது. நான் பொதுவாக ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள ஒரு துறையில் இருந்து வருகிறேன், எனவே இது எனக்கு ஒரு முற்றிலும் புதிய கற்றல் களம் என கூறியுள்ளார்.
Saaki எனப்படும் லைஃப் ஸ்டைஸ் ஃபேஷன் நிறுவனத்தை 2020இல் இருந்து சமந்தா நடத்தி வருகிறார். வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் Secret Alchemist நிறுவனம் சமந்தாவுக்கு சொந்தமானது தான். அடுத்ததாக Truly SMA, Mile Collective, Gataca & ZOY, Ekam Early Learning Center என பல நிறுவனங்களில் கணிசமாக முதலீடு செய்துள்ளார். பிக்கல் பால் போட்டியில் சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார் சமந்தா.சுமார் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

