வேலை.. வேலைனு இருந்தேன்.. 40 வயசிலேயே இப்படி ஆகிட்டேன்: ஏர்டெல் முன்னாள் தலைவர் ராம்ஜி வல்லத்

கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை வேலையில் தான் கழிக்கிறார்கள். வேலைக்கு சென்றால் தான் சம்பளம், சம்பளம் வந்தால் வாழ்க்கை தரம் உயரும், பெற்றோர், பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலைதான் இதற்கு காரணம். இப்படி வேலை, வேலை என இருப்பது சரியல்ல , உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்துகின்றனர்.

வேலையிலேயே கவனம் செலுத்தி உடல் நலனில் கவனம் செலுத்தாமல் விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் ஏர்டெல் நிறுவன முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரியான ராம்ஜி வல்லத். தனது கார்ப்பரேட் வேலை மற்றும் மன அழுத்தம் தன் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

வேலை.. வேலைனு இருந்தேன்.. 40 வயசிலேயே இப்படி  ஆகிட்டேன்: ஏர்டெல் முன்னாள் தலைவர் ராம்ஜி வல்லத்

1992ஆம் ஆண்டு டைட்டன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ராம்ஜி வல்லத், பின்னர் டெல், ஏர்டெல் என பல நிறுவனங்களில் மூத்த பதவிகளை வகித்துள்ளார். ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் ஓடிக்கொண்டிருந்த தனது வாழ்க்கையில், தொடர் வேலை அழுத்தம் ஒரு விபரீத உடல்நிலை பிரச்சினையில் கொண்டு வந்து விட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தொடக்கத்தில் தனது தொழில் வாழ்க்கை சீராகவே இருந்தது, ஆனால் நிறுவனத்தின் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல செல்ல வேலைச்சுமையும் பொறுப்புகளும் பெருமளவு அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுவும், நெட்வொர்க்கிங் நிறுவனமான 3Com நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்த போதுதான் திருப்புமுனை ஏற்பட்டதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

Also Read

வாராந்திர ஆய்வு கூட்டங்கள். விற்பனை இலக்குகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் என தொடர்ந்து அழுத்தங்களுக்கு மத்தியிலேயே பணியாற்ற நேர்ந்தது என கூறும் அவர், தொடர்ந்து நிலவிய கடும் பணிச்சுமையின் விளைவாக, உடல்நிலை மோசமடைய தொடங்கியது என்கிறார். 30களில் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய நிலையில், தனது 40ஆவது வயதில் தீவிரமான Autoimmune condition ஏற்பட்டு, முழுமையாக முடங்கி போனதாக கூறுகிறார்.

CIDP அதாவது Chronic Inflammatory Demyelinating Polyneuropathy எனப்படும் ஒரு அரிய வகை நரம்பியல் பிரச்சினை இருக்கிறதாம். இந்த நோயின் தாக்கத்தால் அவரது உடல் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழுமையான பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உடல்நல பிரச்சனை மற்றும் நீண்ட கால மருத்துவ சிகிச்சை காரணமாக கார்ப்பரேட் வேலைகளை முழுமையாக கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

Recommended For You

தற்போது Motivational Speaker மற்றும் எழுத்தாளராகவும், வழிகாட்டியாகவும் மாறிவிட்ட ராம்ஜி வல்லத், இன்றைய இளைய தலைமுறையினரும் கார்ப்பரேட் ஊழியர்களும் வெற்றியின் பின்னால் ஓடும்போது ஆரோக்கியத்தை ஒருபோதும் இழந்துவிட கூடாது என்ற எச்சரிக்கையை விடுக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+