7 கிராம் தங்க வளையலில் இவ்வளவு தான் தங்கம் இருக்கா? – நகை வாங்க சென்ற பெண் அதிர்ச்சி..!!

காலம்காலமாக நம் இந்தியர்கள் தங்கத்தை தான் நம்பகமான முதலீடாக பார்க்கின்றனர். அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம் என்றால் தங்க நகை தான். பணம் சேர்ந்தால் தங்க நகை வாங்கி வைத்துவிடுவார்கள். அப்படி தன் அம்மா வாங்கிய தங்க நகையை மாற்ற சென்ற பெண் பெரிய அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளார். இது தங்க நகை வாங்கும் பலருக்கும் பெரும் பாடமாக அமைந்துள்ளது.

மேகா (Megha) என்ற பெண் தனது எக்ஸ் பக்கத்தில் தங்கம் குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக தனது அம்மா தெரிந்த ஒரு நகை கடையில் தான் தங்க நகையை வாங்குவார், அப்படி அவர் வாங்கிய ஒரு தங்க வளையலை மாற்ற சென்ற போது தனக்கு அதிர்ச்சி காத்திருந்ததாக கூறியுள்ளார்.

7 கிராம் தங்க வளையலில் இவ்வளவு தான் தங்கம் இருக்கா? – நகை வாங்க சென்ற பெண் அதிர்ச்சி..!!

அம்மாவின் பழைய வளையல் ஒன்றை மாற்றி நகை எடுக்க கடைக்கு சென்றுள்ளார் இவர். அது 7 கிராம் கொண்ட தங்க வளையல். நகைக்கடை ஒன்றில் அந்த வளையலை உருக்கி சோதித்தபோது, அதில் இருந்த சுத்தமான தங்கத்தின் எடை வெறும் 3.3 கிராம் மட்டுமே என தெரிய வந்ததாம். கற்கள் இல்லாத தங்க வளையல் அது, கிட்டதட்ட பாதிக்கு பாதி தான் தங்கம் இருந்திருக்கிறது இது என்னை பேரதிர்ச்சி அடைய வைத்துவிட்டது என கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நகை என்பதால், அப்போதெல்லாம் ஹால்மார்க்கிங் இல்லை. நம்பிக்கை அடிப்படையில் தான் எனது அம்மா குறிப்பிட்ட கடையில் மட்டும் தான் நகையே வாங்குவார்.ஆனால் குறைந்த தங்கத்தை கொண்டு வேறு உலோக கலப்படத்தை அதிகரித்து ஏமாற்றி விற்பனை செய்துள்ளனர் என கவலை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்று கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 7 கிராம் எடை கொண்ட நகை என்றால், அது முழுவதும் 7 கிராம் தங்கம் என்று அர்த்தமல்ல; குறிப்பாக அது ஹால்மார்க் முத்திரை இல்லாத நகையாக இருந்தால் அதில் பாதிதான் தங்கமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Also Read

இவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரவலானதை தொடர்ந்து, பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் கூறுகையில், பழைய தங்க நகைகளில் ஹால்மார்க் இருக்காது பெரும்பாலும் இப்படி கலப்படமானதாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

அந்தக்காலத்தில் நகைகள் பெரும்பாலும் கைவினையாக செய்யப்பட்டன என்பதால், தங்கம் வளைவதற்கும் எளிதில் வேலைப்பாடு செய்வதற்கும் ஏதுவாக வெள்ளி, செம்பு மற்றும் பிற உலோக கலவைகளை அதிகமாக சேர்த்திருப்பார்கள் என ஒருவர் கூறியுள்ளார்.

Recommended For You

சிலர் ஹால்மார்க் முத்திரை எவ்வளவு அவசியம் என்பதை உணர்வதாக தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு அந்த நகையின் உண்மையான தரத்தையும், தூய்மையையும் உறுதி செய்வதோடு, தங்கம் வாங்கும் போது கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது ஹால்மார்க் முத்திரை. எனவே BIS ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே வாங்க வேண்டும் என்ற பாடத்தை இந்த சம்பவம் கற்று தந்துள்ளதாக பலரும் கூறியுள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+