மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: 8ஆவது சம்பள கமிஷனில் காத்திருக்கும் ஜாக்பாட்..!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருப்பது 8ஆவது சம்பள கமிஷன் வெளியிடப் போகும் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகளுக்காக தான். அதிகாரப்பூர்வமாக சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ள நிலையில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் (Fitment Factor) அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

7ஆவது சம்பள கமிஷனில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் கொண்டு தான் சம்பளமே மாற்றி அமைக்கப்பட்டது. இதுவே 8ஆவ்து சம்பள கமிஷனிவிலும் தொடர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரியர் தொகை எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: 8ஆவது சம்பள கமிஷனில் காத்திருக்கும் ஜாக்பாட்..!!

மத்திய அரசு பணியில் Pay Matrix Level 6 பிரிவில் பணிபுரியும் ஊழியருக்கு தற்போது 44,900 ரூபாய் அடிப்படை சம்பளமாக இருக்கிறது. இவருக்கு 8ஆவது சம்பள கமிஷனில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் கொண்டு சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது என வைத்து கொள்வோம். அப்படி என்றால் அவரது புதிய அடிப்படை சம்பளம் 1,15,400 ரூபாயாக மாறும்.

Also Read

ஏற்கனவே சம்பள கமிஷன் ஓராண்டு தாமதமாகி விட்டது. அதாவது 2026 ஜனவரி 1 முதலே புது சம்பளம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது தாமதம் ஆகி விட்டது. இருந்தாலும் புது சம்பளம் தாமதமாகும் அனைத்து மாதங்களுக்குமான தொகை அரியர் பணமாக கணக்கிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும். மேலே கூறி உதாரணத்தில் புது அடிப்படை சம்பளத்திற்கும் பழைய அடிப்படை சம்பளத்திற்கும் இடையே சுமார் 70,000 ரூபாய் வித்தியாசம் இருக்கிறது.

இந்த வித்தியாச தொகையை 12 மாதங்கள் சம்பள கமிஷன் தாம்தம் என வைத்து கொண்டு கணக்கிட்டால் மொத்தம் 8.46 லட்சம் ரூபாய் அரியர் பணமாக வழங்கப்பட வேண்டி இருக்கும். இது மொத்த தொகையாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும். இது அடிப்படை சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. வீட்டு வாடகை படி, அகவிலைப்படி ஆகியவை சேர்ந்தால் பணம் இன்னமும் உயர வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது ஒரு கணிப்பு தானே தவிர உறுதியான தொகை இல்லை. ஏனெனில் ஃபிட்மெண்ட் ஃபேக்டர் , அரியர் கணக்கீடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Recommended For You

நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான 3 உறுப்பினர்களை கொண்ட 8ஆவது சம்பள கமிஷன் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவர்கள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட இன்னும் 6 மாதங்கள் உள்ளன. எனவே, இந்த ஊதிய குழுவின் இறுதி பரிந்துரைகள் 2027-ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதமளவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+