மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குவதற்காக 8ஆவது சம்பளம் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சம்பள கமிஷன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ளது.
8ஆவது சம்பள கமிஷனின் கால அளவே 18 மாதங்கள் தான். அதில் இன்னமும் ஆறு மாதங்களே மீதமுள்ளது. நீதிபதி ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்த குழு, தனது இறுதி அறிக்கையை வரும் ஜூன் மாத வாக்கில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவில் தனது இறுதி கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. அடுத்த மாதம் முதல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் ஃபிட்மண்ட் ஃபேக்டர் உள்ளிட்டவற்றை நிர்ணயம் செய்யும் பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு 7ஆவது சம்பள கமிஷனில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தபட்டது. இந்த முறை 2.57 அல்லது அதற்கு மேல் தான் ஃபிட்மென்ட் ஃபேக்டர் இருக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் 8ஆவது சம்பள கமிஷனிலும் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் தொடர்ந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் தொகை கிடைக்கும் என பார்க்கலாம்.
2026 ஜனவரி 1 முதலே புதிய ஊதியம் அரசு ஊழியர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது தாமதமாகிவிட்டது. எனவே புதிய சம்பளம் எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறதோ அதற்கு அதாவது தவறி போன 2026 ஜனவரி 1 முதல் சம்பளத்தில் உள்ள வித்தியாச தொகையை கணக்கிட்டு அரியர் பணமாக மத்திய அரசு வழங்கிவிடும். 2028 ஜனவரி முதல் புதிய சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் கிடைக்கிறது என்றால் , 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் வரையிலான 24 மாத காலத்திற்கு கூடுதல் சம்பளம் எவ்வளவு கிடைத்திருக்க வேண்டுமோ அதனை கணக்கிட்டு வழங்கிவிடுவார்கள்.
தற்போது Pay Matrix Level 1-இல் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18,000 ரூபாய், 8ஆவது சம்பள கமிஷனில் 2.57 என ஃபிட்மெண்ட் ஃபேக்டர் வைத்தால் புதிய அடிப்படை ஊதியம் 46,260 ரூபாய். அதாவது கூடுதலாக 28,260 ரூபாய் ஒவ்வொரு மாதமும் கிடைத்திருக்க வேண்டும். அப்படி பார்த்தால் 24 மாதங்களுக்கான வித்தியாச தொகை 6.78 லட்சம் ரூபாய். இது அரியர் தொகையாக கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த அரியர் அடிப்படை சம்பளத்தில் மட்டும் கணக்கிடப்படுமா அல்லது டிஏ மற்றும் பிற படிகளையும் கொண்டு கணக்கிடப்படுமா என்பதை அரசு தான் முடிவெடுக்கும். ஏனெனில் சம்பள கமிஷன் தாமதம் ஆனதால் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுவருகிறது. இந்த தொகையை கழித்து கொண்டு தான் அரியர் கணக்கிடப்படுமா என்ற கேள்வி எழுகிறது. அப்படி செய்தால் அரியர் தொகை குறைய வாய்ப்புள்ளது.
எனவே சம்பள கமிஷன் பரிந்துரைகள் மற்றும் ஃபிட்மென்ட் ஃபேக்டர், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு, படிகள் , போனஸ் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் தேதி ஆகியவையும் மத்திய அரசு எடுக்கும் இறுதி முடிவுகளையும் பொறுத்து தான் அரியர் பணம் வழங்கப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

