தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது. இந்த வாரத்தில் 5 வர்த்தக நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலை உயர்ந்துள்ளது, ஒரு நாள் மட்டும் விலை சரிந்துள்ளது. இன்றைய தினம் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 60 ரூபாய் விலை கூடி 11,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 480 ரூபாய் விலை உயர்வு கண்டு 92,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த திங்கள் ,செவ்வாய் என தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாயும், சவரனுக்கு 2000 ரூபாயும் விலை உயர்ந்தது. ஆனால் புதன்கிழமை ஒரே நாளில் கிராமுக்கு 295 ரூபாயும் சவரனுக்கு 2,360 ரூபாயும் விலை சரிந்தது. ஆனால் நேற்று, இன்று என இரண்டு நாட்களில் தங்கம் விலை தங்கம் விலை கிராமுக்க் 180 ரூபாயும் சவரனுக்கு 1440 ரூபாயும் உயர்ந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,655 ரூபாய்க்கும் 10 கிராம் 1,26,550 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,490 ரூபாய்க்கும் ஒரு சவரன் 75,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று உயர்வு கண்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை உயர்ந்து 170 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் உயர்ந்து 1.70 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 255 ரூபாயும் கிலோவுக்கு 2.55 லட்சம் ரூபாயும் விலை குறைவில் தான் இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் ஃபெடரல் ரிசர்வ் கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கிறது. அமெரிக்க பணவீக்கம் அதிகமாக இருப்பதால் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்புடன் க்டந்த சில வாரங்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீடுகளை எடுத்தனர். இதனால் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. ஆனால் நேற்று, இன்று என இரண்டு நாட்களாக உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 3,629 அமெரிக்க டாலர்கள் என உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 43 டாலர்களாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்திருப்பதே தமிழ்நாட்டில் விலை உயர காரணம். எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.24 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

