தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து தினமும் ரூ. 40,000 சம்பாதிக்கும் பெண்.. ஆஹா!

டெல்லி: நாம் பல நேரங்களில் சமூக வலைதளங்கள் மூலமாக, சிறிய முதலீட்டில் தொடங்கி பெரிய அளவில் வளர்ந்தவர்களின் கதைகளைப் பற்றி கேட்டிருப்போம். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது தள்ளுவண்டி கடையின் மூலம் வடா பாவ் விற்பனை செய்து தினமும் பல ஆயிரங்களை சம்பாதிக்கிறார். அவரின் சுவாரஸ்யக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

டெல்லியைச் சேர்ந்த சந்திரிகா தீக்சித், அங்குள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். அதில் சுவையான வடா பாவ் செய்து தினமும் ரூ. 40,000 வரை சம்பாதித்து வருகிறார். இவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சந்திரிகா பிக் பாஸ் OTT 3 நிகழ்ச்சியில் பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

 தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து தினமும் ரூ. 40,000 சம்பாதிக்கும் பெண்.. ஆஹா!

நன்றாக படித்திருக்கும் சந்திரிகாவுக்கு, ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கோ சொந்தக்காலில் நின்று தாமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் ஒரு தள்ளுவண்டி கடையை நடத்த முடிவு செய்திருக்கிறார். அந்த தொழில் அவருக்கு கை மேல் பலன் அளித்துள்ளது.

அதன் விளைவாக நாளொன்றுக்கு தற்போது அதிக அளவிலான தொகையை சம்பாதித்து வருகிறார். அவர் விற்கும் வடா பாவ்-விற்கு டெல்லியைச் சேர்ந்த பலரும் ஃபேன் ஆகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் நீண்ட வரிசையில் நின்று வடா பாவ் உணவை மக்கள் வாங்கி செல்கின்றனர். மிகவும் சுவையாக தயார் செய்து விற்கப்படுவதால், சந்திரிகாவுக்கு "வடா பாவ் கேர்ள்" என்ற பட்டத்தையும் மக்கள் வழங்கி உள்ளனர்.

தனது வளர்ச்சி குறித்து ஒரு ஊடக நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சந்திரிகா, விடா முயற்சி மற்றும் கடின உழைப்பு காரணமாக ஒரு நாளைக்கு ரூ. 40,000 வரை சம்பாதித்து வருகிறேன். உங்களாலும் இதே போல் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் பிற OTT தளங்களை தியாகம் செய்ய வேண்டும்.

இதே தள்ளுவண்டி கடையை 2 வருடங்களுக்கு முன்பு மிகவும் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன். அதன் பின்னர் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உழைக்கத் தொடங்கினேன். இதிலிருந்து தற்போது நல்ல லாபத்தை பெற்று வருகிறேன். அதனை வைத்து என் மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க செயல்பட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

சந்திரிகாவின் கதை பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. எடுக்கும் முயற்சி சிறியதாக இருந்தாலும், அதனை எவ்வாறு வழி நடத்திக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி அமையும் என்பதை இவருடைய கதை எடுத்துக்காட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+