ஜெயிக்கிற குதிரையில தான் பணத்தை கட்டணும் என்பது போல், நிகழ் மற்றும் எதிர்காலத்தில் எந்த துறைகள் வளர்ச்சி காணும் என்பதை அறிந்து அந்த துறையை சேர்ந்த நிறுவனங்களில் நல்ல நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
அந்தவகையில், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த துறையை சேர்ந்த சில நிறுவன பங்குகளை குறித்து பங்கு தரகு நிறுவனங்கள் தங்கள் மதிப்பீட்டை வழங்கியுள்ளனர்.

டாடா எல்க்ஸி: இந்நிறுவனம் ஆட்டோமொபைல், ஒளிபரப்பு, கம்யூனிகேஷன்ஸ், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் டாடா எல்க்ஸி பங்கின் விலை 7 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
2018ல் இப்பங்கின் விலை ரூ.1,024ஆக இருந்தது. 2023 அக்டோபரில் இப்பங்கின் விலை ரூ.8,316ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 20 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது.
பங்கு தரகு நிறுவனங்களான ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் மற்றும் கே.ஆர்.சோக்சி இப்பங்கினை கூடுதலாக வாங்கி சேர்க்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளன. அதேசமயம், எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் இப்பங்கினை விற்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்: சர்வதேச சாப்ட்வேர் நிறுவனமான இந்நிறுவனம், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், கிளவுட், கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் பலவிதமான தீர்வுகளை வழங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 9 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
2018ல் ரூ.610ஆக இருந்த இப்பங்கின் விலை 2023 அக்டோபரில் ரூ.6,380ஆக உயர்ந்து இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் இப்பங்கின் விலை 70 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது. கே.ஆர்.சோக்சி நிறுவனம் இப்பங்கினை கூடுதலாக வாங்கி சேர்க்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் இப்பங்கினை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளன. அதேசமயம் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் இப்பங்கினை விற்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ்: ஆரக்கிள் குழுமத்தின் துணை நிறுவனமான ஆரக்கிள் பைனான்சியல் சர்வீசஸ், வங்கி மற்றும் பிற நிதி தீர்வுகளுக்கான சாப்ட்வேர் தீர்வுகளை வழங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2018 நவம்பரில் இப்பங்கின் விலை ரூ.3,579ஆக இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.4,180.35ஆக இருந்தது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 36 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. தரகு நிறுவனமான டோலட் கேபிட்டலின் ஆய்வாளர்கள் இப்பங்கினை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அஃப்லே இந்தியா: சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான அஃப்லே இந்தியா பங்கின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 5 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. 2019ல் இப்பங்கின் விலை ரூ.168ஆக இருந்தது. 2023 நவம்பர் 17ம் தேதியன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது இப்பங்கின் விலை ரூ.1,035ஆக இருந்தது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 19 சதவீதம் குறைந்துள்ளது. 2023 நவம்பர் நிலவரப்படி, இப்பங்கினை வாங்கலாம் என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
சையண்ட் லிமிடெட்: இந்நிறுவனம் நெட்வொர்க், செயல்பாடுகள், பகுப்பாய்வு மற்றும் புவிசார் தீர்வுகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவடைந்தபோது இப்பங்கின் விலை ரூ.1,731.05ஆக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்துள்ளது. 2018ல் இப்பங்கின் விலை ரூ.612ஆக இருந்தது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 118 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் இப்பங்கினை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications