தங்கத்தின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை 1 லட்சம் ரூபாயை தொட்டு அதிர்ச்சி அளித்தது. ஆனால் தற்போது 24 கேரட் தங்கத்தின் விலை 96,000 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இன்று அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தங்கம் வாங்குவது செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது நம்பிக்கை.
இதன் காரணமாக மக்கள் நகைக் கடைகளில் குவிந்துள்ளனர். தற்போது எழும் கேள்வி என்னவென்றால் நகைக்கடைக்காரர்கள் தங்க நகைகளின் விலையை எப்படி கணக்கிடுகின்றனர்? என்பது தான். சிலருக்கு இது தெரியும். இருப்பினும் தெரியாதவர்களுக்காக தான் இந்த பதிவு. பொதுவாக தங்க நகைகளின் விலை அதில் பதிக்கப்பட்டுள்ள கற்கள், செய்கூலி, வரி, ஹால்மார்க் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது ஏன்?: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்து கலாச்சாரத்தின் படி "அட்சய" என்ற வார்த்தைக்கு "என்றுமே குறையாது" என்பது பொருள். இதன் காரணமாகத் தான் அன்றைய தினம் தொடங்கப்படும் செயல்கள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கம் வாங்குகின்றனர்.
காம ஜுவல்லரியின் மேனேஜிங் டைரக்டர் தங்கம் விலை குறித்த முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தங்கத்தின் விலை 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும். ஒன்று அன்றைய தினம் விற்பனையாகும் சந்தை மதிப்பு, மற்றொன்று தங்கத்திற்கான மேக்கிங் சார்ஜ், அதோடு ஜிஎஸ்டி. இவை அனைத்தும் தான் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன.
இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நீங்கள் 24 கேரட் தங்கத்தை வாங்க இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய நிலவரப்படி 10 கிராம் 24 கேரட் தங்கம் 96,500 ரூபாய். அதுவே 22 கேரட் தங்கமாக இருந்தால் அதன் விலை 88,394 ரூபாய். 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதனால்தான் இவற்றை 916 என்று கூறுகின்றனர்.
அதுவே 24 கேரட் தங்கம் என்பது தூய தங்கம். இதில் 99.9% தூய தங்கம் இருக்கும். தங்கத்தை வளைத்து, முறுக்கி நகைகள் செய்ய முடியாது. ஏனெனில் இது மிகவும் மிருதுவான உலோகம். நகைகள் செய்ய முயற்சித்தால் அவை உடைந்து விடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகத்தான் 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தங்கத்தோடு.. பிற உலோகங்களான சில்வர், காப்பர் ஆகியவை கலந்து நகைகள் செய்யப்படுகிறது.
8.9 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதன் விலை இன்றைய நிலவரப்படி 78,670.66 ரூபாய். இந்த தங்கச் சங்கிலியை செய்வதற்கான மேக்கிங் சார்ஜ் கிராமுக்கு ரூ.499 எனில் 8.9 கிராமுக்கு 4,441.10 ரூபாய். இதனால் தங்கச் சங்கிலியின் விலை ரூ. 78,670.66 + ரூ. 4441.10-ஆக இருக்கும்.
இதனால் 83,111.76 ரூபாய் விலையாக இருக்கும். அதோடு 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் 2,493.35 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதன் பின் ஹால்மார்க்கின் கட்டணம் 45 ரூபாய் என்றால் மொத்தமாக சேர்த்து 85,650 ரூபாய் செலவாகலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications