ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமையன்று அட்சய திருதியை பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை அதிகளவில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது, MCX சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை குறைக்க மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது இதனால் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையிலும் இந்திய ரீடைல் சந்தையில் அட்சய திருதியை பண்டிகை காரணமாக தங்கம் விலை அதிகரித்துள்ளது. பொதுவான விஷயம் என்றாலும் சர்வதேச சந்தையில் குறைந்துள்ள போது குறைந்த பட்சம் விலை மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் 1 கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்துள்ளது.
அட்சய திருதியை பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக, 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து 60,000 ரூபாய் என்ற அளவீட்டை தாண்டி இன்று 61800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சப்ளை டிமாண் பிரச்சனை மட்டுமே.
அட்சய திருதியை பண்டிகையின் போது தங்கம் போன்ற லாபம் தரும் முதலீடுகளை செய்வது, புதிய வர்த்தகம் துவங்குவது, போன்ற புதிய மற்றும் நல்ல முயற்சிகளை செய்ய சிறப்பான நாளாக பாரக்கப்படுவதால் இந்தியா முழுவதும் தங்கத்திற்கு அதிக டிமாண்ட் உருவாகி தங்கம் விலை அதிகரித்துள்ளது.
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதற்கான சுப முகூர்த்தம் நேரம் இதுதான். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 7:49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7:47 வரையில் தங்கம் வாங்க நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் அமெரிக்கவின் S&P PMI தரவுகள் வெளியீடு மற்றும் அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை குறைக்க மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளதால் இன்று காலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2005 டாலரில் இருந்து மள மளவென 1994 டாலர் வரையில் சரிந்துள்ளது.
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாத ஆர்டர் விலை 0.39 சதவீதம் சரிந்து 60,270.00 ரூபாயாக உள்ளது, 1 கிலோ வெள்ளி விலை 0.39 சதவீதம் சரிந்து 75,206 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications