அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்கவில்லையே.. மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளிலேயே முதன்மை பொருளாதா நாடான அமெரிக்காவில் ஒரு சின்ன அணு அசைந்தால் போதும். அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.

ஏனெனில் அமெரிக்காவினைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரமும் பிணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தினை சீரமைக்க, அமெரிக்கா ஜனாதிபதி தக்க சீரமைப்பு நடவடிக்கைகளை எடுப்பார் எனவும், அது பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகாதா என கண்கொத்தி பாம்பாக காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு பெரிய இரையைத் தான் கொடுத்திருக்கிறது. சரி அப்படி என்ன இரை.. வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.

காலையில் வீழ்ச்சி, மாலையில் ஏற்றம்
 

காலையில் வீழ்ச்சி, மாலையில் ஏற்றம்

பொதுவாக உலகில் எந்தவொரு பிரச்சனையானலும், அதனால் பெரிதும் மாற்றம் காண்பது தங்கமே. கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் கொண்டே அனைத்து மீடியா, செய்தித்தாள், செய்திகள் என அனைத்திலும் வெளியான செய்தி தங்கம் விலை வீழ்ச்சி தான். ஆனால் காலையில் படு வீழ்ச்சி கண்டிருந்த தங்கம் விலையானது, மாலையில் கிடுகிடு வென ஏற்றம் கண்டுள்ளது ஏன்.

பல அதிரடி நடவடிக்கை

பல அதிரடி நடவடிக்கை

சீனாவில் முதன் முதலாக தோன்றிய வைரஸானது தற்போது பல நாடுகளுக்கும் படை எடுக்க ஆரம்பித்துள்ளது. அது வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஏன் அமெரிக்கா பொருளாதாரத்தினையே என்ன சேதி என கேட்க ஆரம்பித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் எப்படியேனும் பொருளதாரத்தினை மீட்டு விட வேண்டும் என, அமெரிக்கா பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வட்டி குறைப்பு கைகொடுக்கவில்லை

வட்டி குறைப்பு கைகொடுக்கவில்லை

உதாரணத்திற்கு அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக சில தினங்களுக்கு முன்பு வட்டி விகிதத்தினை குறைத்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையினை உருவாக்கும் என்றும் அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்கா நினைத்தது போல அப்படி ஏதும் பெரிதாக நடந்துவிடவில்லை. அதுவும் சீனாவின் கொரோனாவும் சரி, முதலீட்டாளர்களும் சரி இதற்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

அவசர நடவடிக்கை
 

அவசர நடவடிக்கை

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் இருந்தே தங்கம் விலையானது சற்று குறைந்து இருந்தாலும், மாலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் ஆடிக் கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையெல்லாம் பத்தாது என தெரிந்து கொண்ட அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, நெருக்கடி கால வணிக காகிதம் (commercial paper funding facility) என்ற நிதி வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் தங்கம் விலையானது கிடு கிடு வென ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது செவ்வாய்கிழமையன்று மாலையில் 3.4% ஏற்றம் கண்டு 1,537.60 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அன்று காலையில் 1506 டாலர்களாக தொடங்கிய சந்தையானது அதிகபட்சமாக 1466.30 டாலர்கள் வரை குறைந்து பின்னர், அதிகபட்சமாக 1554.05 டாலர்களாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் 1538.30 ஆக தொடங்கிய வர்த்தகம் தற்போது 1,533.55 ஆக வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டி வர்த்தகத்தில் விலை

கமாடிட்டி வர்த்தகத்தில் விலை

இதே இந்தியாவின் எம்சிஎக்ஸ் ப்யூச்சர் கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில், 10 கிராம் தங்கத்தின் விலையானது, செவ்வாய்கிழமையன்று காலையில் 39,489 ரூபாயாகவும், இன்று குறைந்தபட்சமாக 38650 ரூபாய் ஆக இருந்த நிலையில், அதிகபட்சமாக 40,934 ரூபாயாக வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது. இது கடந்த வாரம் முழுவதிலும் கண்ட தொடர்ச்சியான சரிவுக்கு பிறகு காணும் எழுச்சியாகும்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் கடந்த செவ்வாய்கிழமையன்று பரண தங்கத்தின் விலையானது (22 கேரட்) கிராமுக்கு 4,230 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து, 30,960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக சவரனுக்கு 33,848 ரூபாயாக விற்பனை செய்யப்படடுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று குறைபட்ச விலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 2,888 ரூபாய் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America’s Federal Reserve is creating a CPFF to support the flow of credit, but its not effect in gold

America's Fed announces launch of second facility to support credit markets. at that same time Gold and silver edged higher on Tuesday as investors moved to safe haven assets in a risk-off environment due to rising coronavirus cases in India and abroad.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more