தங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில் $30 வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் எங்கிலும் கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில் பல ஆயிரம் பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.

இதற்கு மத்தியில் மக்கள் இதிலிருந்து எப்படித் தான் தங்களை தற்காத்துக் கொள்வது, பொருளாதார ரீதியாக தங்களை எப்படி தக்க வைத்துக் கொள்வது என பல குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இது தான் இப்படி எனில் தங்கத்தின் விலையும் இன்று சற்று குழப்பமாகத்தான் உள்ளது. பொதுவாக சர்வதேச சந்தையின் எதிரொலியை கண்டு தான், இந்தியா சந்தைகளில் தங்கம் விலை வர்த்தகமாகும். ஆனால் இன்று அதற்கு எதிர்மாறாக உள்ளது. சரி வாங்க இன்று எப்படி தங்கம் விலை எப்படின்னு பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் விலை
 

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று அவுன்ஸூக்கு 30 டாலர் வீழ்ச்சி கண்டு 1630 டாலர்களாக வீழ்ச்சியடைந்து வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட நேற்றைய முடிவு விலையில் இருந்து 1.83% வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது.

தேர்ச்சி

தேர்ச்சி

இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு அவர் தமிழக மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசுகையில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்கப்படும். மதம், ஜாதி, பொருளாதாரம் கடந்த மக்கள் ஒன்று கூட வேண்டும் . மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. இது உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு ஆகும். கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.

எம்சிஎக்ஸில் விலை

எம்சிஎக்ஸில் விலை

பொதுவாக இந்திய எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது சர்வதேச தங்கம் விலையினைப் பொறுத்தே விலை மாறும். ஆனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 1076 ரூபாய் அதிகரித்து, 42,455 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது இன்று மட்டும் அல்ல கடந்த நான்கு வர்த்தக தினத்தில் தங்கம் விலையானது மூன்று நாள் ஏற்றமும், அடுத்த ஒரு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இன்றும் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
 

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டிருந்தாலும், வெள்ளியின் விலையானது 0.16% ஏற்றம் கண்டு, 14.280 டாலர்களாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றும் நேற்றைய முடிவு விலையுடன் ஒப்பிடும்போது ஏற்றத்தில் இருந்து வருகிறது என்றாலும், இன்றைய தொடக்க விலை 14,810 என்ற நிலையில் தற்போது 14.280 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கமாடிட்டி வர்த்தகத்தில் 386 ரூபாய் அதிகரித்து., 40,910 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தொடர்ந்து மூன்றாவது நாள் ஏற்றமாகும். சீனாவில் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில் வெள்ளியின் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும், சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை (22 கேரட்) 4,108 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 805 ரூபாய் அதிகரித்து 32,864 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. மார்ச் 20ம் தேதியிலிருந்து ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் விலையானது 31,272 ரூபாயாக இருந்த சவரன் விலையானது, இன்று 32864 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் சவரனுக்கு 6 நாளில் 1592 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி ஆபரணம் விலை

வெள்ளி ஆபரணம் விலை

வெள்ளி விலையானது கிராமுக்கு 41.81 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே கிலோவுக்கு 790 ரூபாய் அதிகரித்து 41,810 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை அவ்வப்போது சற்று குறைந்து வந்தாலும், தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America’s rescue package announce lifting global gold rate, its down $30 today, but MCX gold rate up to Rs.1000

US Federal Reserve’s rescue package lifting equities and gold. So Global Gold rate down $30 today. But MCX gold rate up Rs.1000 in MCX market.
Story first published: Wednesday, March 25, 2020, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?