மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார். கடந்த புதன்கிழமையன்று அம்மாநில சட்டப்பேரவையில், முதல்வர் கான்ராட் சங்கா அம்மாநிலத்துக்கான 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அம்மாநில நிதியமைச்சரும், முதல்வருமான கான்ராட் சங்மா ரூ.1,970 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அம்மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய இடங்களை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மொத்தம் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2028ம் ஆண்டுக்குள் மாநிலத்தை 1,000 கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட மேகாலயா மிஷன் 10 முயற்சியின் கீழ், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக சுற்றுலாவை அம்மாநில அரசு முன்னுரிமைப்படுத்தியது. மேலும் பட்ஜெட்டில், பெண்களுக்கான நலத்திட்டங்கள், மெட்ரிக் மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை, ஹோம்ஸ்டே திட்டத்தின்கீழ், ஹோம்ஸ்டே தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் மானியம் 45 சதவீதமாக அதிகரிப்பு, கல்வி ரூ.3,654 கோடி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வெளியானது.

இது தவிர, ஷில்லாங்கில் உள்ள பழங்குடி கலாச்சார மையம் மற்றும் காசி மற்றும் காரோ கலாச்சார பராம்பரிய மையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட கலை மற்றும் கலாச்சார முயற்சிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில் 60 சதவீதம் பெண்களின் நலனுக்கான அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அம்பரீன் லிங்டோ தெரிவித்துள்ளார். பெண்களின் நல்வாழ்வுக்கான அம்மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது எடுத்துரைக்கிறது.
இது தொடர்பாக அம்பரீன் லிங்டோ மேலும் கூறுகையில், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான முயற்சிகளை விரைவுப்படுத்துவதே முதல்வரின் ஒதுக்கீடு நோக்கமாக கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெண்களுக்கு ஆதரவளிக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications