யெஸ் பேங்கில் என்ன பிரச்சனை என உங்களுக்கு நன்றாகவே தெரியும். 50,000 ரூபாய் கட்டுப்பாடு இருப்பதையும் அறிவீர்கள்.
ஆனால் யெஸ் பேங்கில் இந்த 50,000 ரூபாய் கட்டுப்பாடு வருவதற்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் பணத்தை பலரும் உஷாராக வெளியே எடுத்து இருக்கிறார்கள்.
எவ்வளவு ரூபாய் டெபாசிட்டாக இருந்தது. அதில் எவ்வளவு ரூபாயை முன் கூட்டியே எடுத்துவிட்டார்கள், யார் எல்லாம் எடுத்து இருக்கிறார்கள்..? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.
டெபாசிட் கணக்கு
கடந்த மார்ச் 2018 நிலவரப் படி 2,00,738 கோடி ரூபாய் டெபாசிட் பணமாக இருந்து இருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 2019 நிலவரப்படி 2.27 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது டெபாசிட். கடந்த செப்டம்பர் 2019-ல் யெஸ் பேங்கின் மொத்த டெபாசிட் 2.09 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது.
வெளியேற்றம்
ஆக 2.27 லட்சம் கோடி - 2.09 லட்சம் கோடி = 18,000 கோடி ரூபாயை, இந்த ஏப்ரல் 2019 முதல் செப்டம்பர் 2019 காலத்துக்குள் வெளியே எடுத்து இருக்கிறார்கள். மிஸ் பண்ணிட்டோமே.. அப்பவே யெஸ் பேங்குல சிக்கல் இருக்குறதா இத்தனை சிக்னல் வந்திருக்கே! Link என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.
சிக்னல்
அதில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து யெஸ் பேங்கில் ஏதோ பிரச்சனை இருப்பதாக பல சிக்னல்கள் எப்படி வந்தது. அதற்கு ஆர்பிஐ என்ன நடவடிக்கை எடுத்தது என விரிவாகச் சொல்லி இருக்கிறோம். இந்த சிக்னல்களை முன் கூட்டியே கணித்த சில யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், சுமார் 18,000 கோடி ரூபாய் டெபாசிட்டை, யெஸ் பேங்கில் இருந்து எடுத்து விட்டார்கள் போல் இருக்கிறது.
அதிர்ஷ்டம்
செப்டம்பர் 2019-க்குப் பிறகு கூட, அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான காலத்தில், யெஸ் பேங்கில் இருந்து சுமாராக 10 - 20 சதவிகித டெபாசிட்டுகள் கூடுதலாக வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆக 2.09 லட்சம் கோடியில் 10 % என்றால் 20,000 கோடி. 2.09 லட்சம் கோடியில் 20 % என்றால் அது 40,000 கோடி வருகிறது. நாம் 20,000 கோடியை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
மொத்தப் பணம் வெளியேற்றம்
சுமாராக, ஏப்ரல் - செப்டம்பர் 2019-ல் வெளியேறிய 18,000 கோடி + 20,000 கோடி (2.09 லட்சம் கோடியில் 10 %) = 38,000 கோடி ரூபாயாவது, யெஸ் பேங்க் சிக்கல் வருவதற்கு முன், லட்டாக வெளியேறி இருக்கிறது. இதில் குஜராத்தின் வதோதரா ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு கம்பெனி 265 கோடி ரூபாயை எடுத்தது, திருப்பதி தேவஸ்தானம் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்டை எடுத்தது எல்லாம் அடக்கம்.
டாப் 10 டெபாசிட்டர்கள்
கடந்த மார்ச் 2019 நிலவரப்படி, யெஸ் பேங்கின் டாப் 10 டெபாசிட்டர்கள் மட்டும் சுமாராக 24,600 கோடி ரூபாய் பணத்தை யெஸ் பேங்கில் டெபாசிட் செய்து வைத்து இருக்கிறார்களாம். இதில் சில கம்பெனிகளும் அடக்கமாம். அட ச்சே, அப்பவே பணத்த எடுத்து இருக்கலாமோ, மிஸ் பண்ணிட்டோமே, நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லையே என புலம்புவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. என்ன செய்ய காத்திருந்து பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டியது தான் ஒரே வழி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications