ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் தயாரித்து வந்தது. இந்த ஆலையில் ஐபோன்கள் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. கடந்த 8ம் தேதியன்று இந்த ஆலையை டாடா குழுமத்தை சேர்ந்த டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 75 கோடி டாலருக்கு வாங்கியது.
இதனையடுத்து இந்நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற சிறப்பை பெற்றது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாக சப்ளையர்களில் ஒருவராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்ட்ரான் கையில் ஆலை இருந்தபோது 2020ம் ஆண்டின் பிற்பகுதியில் ஊதியம் தொடர்பான பிரச்சினைகளால் தொழிலாளர்கள் கொந்தளித்ததால் அந்நிறுவனம் பெரிய சர்ச்சையில் சிக்கியது. பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் கொடுக்காதது, அதிக நேரம் வேலை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுக்களில் விஸ்ட்ரான் சிக்கியது.
இறுதியில் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டதையடுத்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக தகவல். இந்த சர்ச்சைக்குரிய ஆலையை டாடா குழுமம் வாங்கியிருப்பது அந்த ஆலையில் பணி புரியும் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
டாடா குழுமம் வாங்கியுள்ள இந்த நிறுவன வளாகத்தில் பழைய மற்றும் புதிய என இரண்டு ஆலைகள் உள்ளன. பழைய ஆலையில் ஒரு ஷிப்ட்டுக்கு 8,000 தொழிலாளர்களும், புதிய ஆலையில் 5,000 முதல் 6,000 தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் அசாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
இந்த ஆலைகளில் பணிபரியும் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் பெண்கள். டாடா நிறுவனம் தற்போது தான் இந்த ஆலையை கையகப்படுத்தியுள்ளதால், சம்பளம் மற்றும் வசதிகளில் உடனடி அதிகரிப்பை தொழிலாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதேசமயம், முந்தைய உரிமையாளரான விஸ்ட்ரான் நிறுவனத்தை காட்டிலும் டாடா எல்க்ட்ரானிக்ஸ் கனிவாக இருக்கும் என்று அவர்கள் மிகவும் நம்புகின்றனர். அந்த ஆலையில் பணிபுரியம் ஒரு பெண் ஊழியர் கூறுகையில், முன்பு நாங்கள் விஸ்ட்ரான் அடையாளத்துக்கு ஆசைப்பட்டோம், இப்போது டாடா அடையாளமாக உள்ளது.
2020ம் ஆண்டில் மாத சம்பளமாக ரூ.12,000 வாங்கினோம். தற்போது, பி.எஃப், மாநில காப்பீடு திட்டம் மற்றும் மாதாந்திர கேண்டீன் கட்டணமான ரூ.240 ஆகியவற்றை கழித்து மாத சம்பளமாக ரூ.15,250 வாங்குகிறோம்.
பணி ஒப்பந்தங்கள் இரண்டு ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகின்றன. இருப்பினும் ஒப்பந்தம் நீட்டிப்பு குறித்து முறையான அறிவிப்பும் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று சில தொழிலாளர்கள் தெரிவித்தனர். தொழிலாளர்களை அவர்கள் தொந்தரவு செய்வதில்லை, வெவ்வேறு கல்வி தொகுதிகள் இருந்தாலும் ஊதியம் ஒன்றுதான்.
இங்குள்ள தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். நிறுவனம் வாகனம் எங்களை இறக்கி விடும் இடத்தில் இருந்து பத்து நிமிடம் நடந்து சென்றுதான் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்ல வேண்டும். இரவு நேரத்தில் மட்டும் நாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு முன்னால் இறக்கிவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications