நடப்பு ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை அவுன்ஸூக்கு 1,700 டாலரை எட்டும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை அவுன்ஸூக்கு 1,700 டாலரை எட்டும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் விலை உயர்ந்த உலோகங்களுக்கான போக்கு மிக நேர்மறையாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமையன்று வெளியான BOA செக்யூரிட்டீஸ்ஸின் விலை உயர்ந்த உலோக ஆய்வாளர் மைக்கேல் விட்மர், பத்திர ஆதாயம் குறைந்து வரும் அதே நேரத்தில், பாதுக்காப்பான புகலிடமான தங்கம் விலையை இது ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் உலகளாவிய தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் தற்போது மற்ற நாடுகளுக்கும் சற்று பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இன்னும் இதன் தாக்கம் அதிகரித்து உலகளாவிய தொற்று நோயாக உருவெடுத்தால் தங்கத்தின் விலை 2,000 டாலர்கள் வரை செல்லக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அவுன்ஸூக்கு 5.55 டாலர்கள் குறைந்து 1,636.810 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
மேலும் புதிய தொற்றுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலையானது பெரும் தலைவலியாக மாறும் என்றும் விட்மர் கூறியுள்ளார். மேலும் தங்கம் விலையானது முழுக்க கொரோனாவால் இயக்கப்படுகிறது என்பதை விட, நீண்டகாலமாக தங்கம் விலையானது ஏற்றத்தில் உள்ளது. ஆக வைரஸை பார்ப்பதற்கு பதில் முதலீட்டாளர்கள் உலகளாவிய வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விட்மர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கா - சீனா இடையே நடந்து வந்த வர்த்தகப் போரானது அந்த இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் எடைப்போட்டது. சொல்லப்போனால் அமெரிக்கா - சீனா வர்த்தக யுத்தத்தால் உலகளாவிய பொருளாதாரம் 30 ஆண்டுகளில் காணாப்படாத அளவுக்கு நிச்சயமற்ற பொருளாதார கொள்கையை காட்டியது என்று விட்மர் கூறியுள்ளார்.
மேலும் பத்திர விளைச்சல் வீழ்ச்சி, டாலரின் மதிப்பு உள்ளிட்ட பலம் காரணிகள் இணைந்து தங்கம் விலையை மேலும் ஆதரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே உயரும் பணவீக்கமானது தங்கத்திற்கு எதிர்மறையாக இருக்கும் என்றும், இது பெரும் தலைவலியாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால் சர்வதேச சந்தைகள் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications