ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு செய்யப்படும் வைட் காலர் வேலைகளுக்கு தான் அதிக வருமானம், சுயதொழில் செய்பவர்களுக்கு எல்லாம் அவ்வளவு வருமானம் வருவதில்லை என்று தான் நம்மில் பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அது இல்லை என்பதை நிரூபிக்கும் ஒரு பதிவு சமூகவலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.
சங்கித் என்பவர் பெங்களூருவில் கார் பயணம் மேற்கொண்ட போது, ஓட்டுநருடன் ஏற்பட்ட உரையாடல் மூலம் அவர் தினசரி 20,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதை அறிந்து ஆச்சர்யப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பெங்களூருவில் மெஜஸ்டிக் பகுதிக்கு செல்வதற்காக சங்கித் ஊபரில் காரை முன்பதிவு செய்துள்ளார். இந்த பயணத்தின் போது நடந்த உரையாடலில் ஓட்டுநரின் தினசரி வருமானம் குறித்து பேச்சு வந்துள்ளது.

அப்போது இரவு 10:30 மணி நிலவரப்படி, அன்றைய தினத்தில் மட்டும் ஊபர் மூலம் 4,800 ரூபாய் வருமானம் ஈட்டியிருந்த அந்த ஓட்டுநர் இன்னும் இரண்டு மணி நேரம் கூடுதலாகக் கார் ஓட்ட திட்டமிட்டுள்ளதாக கூறினாராம். ஊபர் வருமானத்தை விட பெரிய ஆச்சரியம் அவரது மற்றொரு வருமானம். அந்த ஓட்டுநர் மும்பையில் தனக்கு சொந்தமாக 10 மாருதி சுசூகி எர்டிகா கார்கள் இருப்பதாகவும், அவற்றை வாடகைக்கு விட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு எர்டிகா காரிலிருந்தும் தினசரி 1,500 ரூபாய் வாடகை கிடைப்பதாகவும், இதன் மூலம் 10 கார்களிலிருந்து மட்டும் தினமும் 15,000 ரூபாய் வருமானம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஊபர் வருமானம் சுமார் 4,800 ரூபாய் மற்றும் கார் வாடகை வருமானம் 15,000 ரூபாய் ஆகிய இரண்டையும் சேர்த்தால், அவரது மொத்த தினசரி வருமானம் 19,800 ரூபாயாக உள்ளது.
இதே வருமானம் 30 நாட்களுக்கும் தொடர்ந்தால், அது சுமார் 5.94 லட்சம் ரூபாயாகும். இந்த தொகையை கேட்ட சங்கித், ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த மேலாளரின் ஊதியத்தை விட இது அதிகமானது என பதிவிட்டுள்ளார். மேலும், ஒருவரின் தோற்றம், உடை அல்லது வேலையை வைத்து மட்டுமே அவரது நிதி நிலையை மதிப்பிட கூடாது என்ற கருத்தையும் இந்த சம்பவம் முன்வைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கி வளர்த்து வரும் ஓட்டுநரிம் முயற்சியையும் உழைப்பையும் பலர் பாராட்டியுள்ளனர். பெங்களூருவில் இதேபோன்ற கார் தொழில் மூலம் வீடு, நிலம் வாங்கி வாழ்க்கையில் முன்னேறிய மற்றொரு ஓட்டுநரின் அனுபவத்தையும் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
தினசரி 20,000 ரூபாய் வருமானம் என்பது மொத்த தொகை மட்டுமே என்றும், நிகர லாபம் அதுவாக இருக்காது என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். எரிபொருள் , வாகன பராமரிப்பு, காப்பீடு, கடன் தவணைகள், ஓட்டுநர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட்டால் ஏற்படும் கூடுதல் செலவுகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

