ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்..!! தமிழக அரசின் அன்னபூரணி திட்டம்.. விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலின் போது தவெக சார்பில் பெண் வாக்காளர்களை மையப்படுத்தி பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டன. அதில் முக்கியமானது ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்க வழிவகை செய்யும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்.

ஒரு கேஸ் சிலிண்டர் விலையே 957.50 ரூபாய், இதில் டெலிவரி செய்யும் நபருக்கான பணத்துடன் சேர்த்து 1000 ரூபாய் ஆகிவிடுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் சிலிண்டருக்கே 1000 ரூபாய் செலவிட வேண்டும், ஆண்டுக்கு 12,000 ரூபாய். இதுவே ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்கிறது என்றால் சிலிண்டர் விலை மட்டும் வைத்து பார்த்தால் நமக்கு 5745 ரூபாய் மிச்சம்.

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்..!! தமிழக அரசின் அன்னபூரணி திட்டம்.. விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்நிலையில் இந்த திட்டம் எப்போது முதல் அமலுக்கு வரும் என லட்சக்கணக்கான பெண்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், வரும் 2027 பொங்கல் பண்டிகையின் போது இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே அறிவிப்பு வெளியிட்டார். இதன்மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என முதலமைச்சர் விஜய் கூறினார்.

இந்நிலையில் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்களை பெற எப்படி விண்ணப்பம் செய்வது என மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இதற்காக நாம் தனியாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை. தமிழக அரசே பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

Also Read

மத்திய அரசின் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச காஸ் இணைப்பு பெற்றவர்கள் மற்றும் மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை பெறுபவர்கள் , ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானம் கொண்ட குடும்பத்தினர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 2.4 கோடி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இவர்களில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர். முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக பெற உள்ளனர். இலவச சிலிண்டர்கள் என்றால், சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக தமிழக அரசால் செலுத்தப்படும்.

Recommended For You

எனவே நீங்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றிருந்தால் உங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல மகளிர் உரிமை தொகை பெறும் குடும்ப அட்டைதாரராக இருந்தாலும் இலவச சிலிண்டர் பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசு இதற்கான விரிவான தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+