ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு வந்த நிலை தாண்டி நவராத்திரி, காதலர் தினம், புத்தாண்டு என அனைத்து முக்கிய பண்டிகைகள், முக்கிய தினங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு விற்பனையின் டிரெண்ட் தற்போது ஒரு படிக்கு மேலே சென்று, உலகளவில் பிரபலமாக நடக்கும் சிறப்பு விற்பனைகளும் இந்தியாவுக்கு வர துவங்கியுள்ளது.

இண்டர்நெட், சமுக வலைத்தளம் உலக நாடுகளின் கலாச்சாரங்களுக்கு மத்தியிலான இடைவெளியை குறைந்த நிலையில், அமெரிக்காவில் பிரபலமாக விளங்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனை தற்போது இந்தியாவில் பிரபலமாக துவங்கியுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் Thanksgiving பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டில் Black Friday விற்பனை மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்த ஒரு நாளில் மட்டும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடக்கும். இந்த சிறப்பு விற்பனையில் டிவி, பிர்ட்ஜ் முதல் லிப்ஸ்டிக், உள்ளாடை வரையில் பெரும் தள்ளுபடியில் விற்பனை நடக்கும்.
இந்த பிளாக் ஃப்ரைடே இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக டிரெண்டாகி வரும் வேளையில், ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களை கவரும் கையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களும், ஆன்லைன் சேவை அளிக்கும் நிறுவனங்களும், லைப்ஸ்டைல் பிராண்டுகளும் சிறப்பு Black Friday விற்பனை அறிவித்து வருகிறது.
இதுநாள் வரையில் பேஷன், எலக்ட்ரானிக்ஸ், காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் மட்டுமே Black Friday விற்பனையில் விற்கப்பட்ட நிலையில் இந்த வருடம் டிராவல், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் லைப்ஸ்டைல் பிராண்டுகளும் இந்த சிறப்பு விற்பனையில் இறங்கியுள்ளது.
உதாரணமாக மேக்மை டிரிப், கிளியர்டிரிப் போன்றவை Black Friday-வை டார்கெட் செய்து சிறப்பு தள்ளுபடி சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் டெல்லியில் பிரபலமாக விளங்கும் எரோஸ் ஹோட்டல் கடந்த சில வருடங்களாக மக்களின் நவம்பர் மாத பிற்பகுதி பயணங்களைக் கவனித்து தற்போது சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது.
மேலும் பேக், சூட்கேஸ் போன்றவற்றைத் தயாரிக்கும் VIP Industries நவம்பர் - டிசம்பர் பயண சீசனை முன்னிட்டு பிளாக் ஃப்ரைடே-வில் தனது தள்ளுபடி விற்பனையை அறிவித்து வருகிறது.
இதன் மூலம் இந்திய விற்பனையாளர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்டவும், மக்களுக்கு ஷாப்பி செய்யவும் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பிளாக் ஃப்ரைடே விற்பனை டிரெண்டாகும் பட்சத்தில் விரைவில் சீனாவின் சிங்கிள் டே விற்பனை 11.11 கூட இந்தியாவில் வரலாம்.


Click it and Unblock the Notifications

