தங்க ஆர்வலர்களுக்கு பட்ஜெட் 2021 கொடுத்த செம சர்பிரைஸ்.. 2-வது நாளாகவும் சரிவில் தங்கம் விலை..!

பட்ஜெட் 2021ல் அறிவிப்பின் எதிரொலியாக தங்கம் விலையானது திங்கட்கிழமையன்று, இந்திய கமாடிட்டி வர்த்தகம், ஆபரண தங்கம் என இரண்டிலும் விலை பலத்த சரிவினைக் கண்டது.

இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கும், தங்க நகை ஆர்வலர்களுக்கும் மிக நல்ல விஷயமே.

தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டிருந்தாலும், இதன் எதிரொலியாக நேற்று தங்கம் விலை மட்டுமே பலத்த சரிவினைக் கண்டுள்ளது. எனினும் வெள்ளி விலையானது கிடுகிடு ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இன்று இவ்விரண்டின் விலையும் சரிவினைக் கண்டு வருகின்றது.

இறக்குமதி வரி குறைப்பு

இறக்குமதி வரி குறைப்பு

இன்றைய காலகட்டத்திலும் மக்களின் விருப்பமான முதலீடாக மட்டும் அல்லாமல், விருப்பமான ஆபரணமாகவும் இருந்து வரும் தங்கத்திற்கு, இறக்குமதி வரியினை 12.5% ஆக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியினை 7.5% ஆக குறைத்துள்ள இந்திய அரசு. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

நகைத்துறை வரவேற்பு

நகைத்துறை வரவேற்பு

சர்வதேச அளவில் தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வோராக இருக்கும் இந்தியாவில், இறக்குமதி அதிகமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் இறக்குமதி வரியானது அதிகரிப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக வரி அதிகரிப்புடன், கொரோனாவும் சேர்ந்து கொண்டது. இதனால் வரலாறு காணாத அளவு தங்கம் இறக்குமதி சரிந்தது. தேவையும் குறைந்தது. இதனால் நகைத்துறை பெரும் அடி வாங்கியது. குறிப்பாக நகை ஏற்றுமதி குறைந்தது. இதற்கிடையில் தான் இந்த பட்ஜெட்டில் அரசு வரியினை குறைத்துள்ளது.

இன்னும் வரி குறையணும்

இன்னும் வரி குறையணும்

தற்போது இறக்குமதி வரியானது 12.5%ல் இருந்து 7.5% குறைக்கப்பட்டிருந்தாலும், இதனுடன் AIDS 2.5% விதிக்கப்படுவதால் வரி இன்னும் கூடுதலாகவே உள்ளது. இதனால் இன்னும் குறைக்க வேண்டும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், முன்பிருந்த வரிச்சுமையானது சற்று குறையும். இது தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய சற்று ஆதரவாக அமையும். எனினும் இது விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலரின் ஊக்கம்

டாலரின் ஊக்கம்

இந்திய சந்தையில் தங்கம் விலை சரிய பல்வேறு காரணிகள் ஆதரவாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையிலும் டாலரின் மதிப்பு பலமான ஏற்றத்தில் காணப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை சரியாக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதோடு சர்வதேச பங்கு சந்தைகளும் பலத்த ஏற்றத்தினை கண்டு வருவது, ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 7.60 டாலர்கள் குறைந்து, 1856.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே முந்தைய அமர்வில் தங்கம் விலையானது 1863.60 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1860.10 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் நேற்றைய குறைந்தபட்ச விலையான 1851.70 டாலர்களை உடைத்தால், இன்னும் சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதே சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்த போதிலும் வெள்ளியின் விலையானது நேற்று பலத்த ஏற்றத்தினை கண்டது. எனினும் இன்று 2.50% சரிவில் காணப்படுகிறது. தற்போது 28.683 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய முடிவு விலையில் 29.418 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 28.650 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக இன்றும், தங்கத்தின் விலை சரிந்து வருகின்றது. தற்போது 10 கிராமுக்கு 194 ரூபாய் குறைந்து, 48,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக, நேற்று பலத்த ஏற்றம் கண்டு காணப்பட்டது. குறிப்பாக நேற்று 5% மேலாக அதிகரித்தது. எனினும் இன்று தற்போது கிலோவுக்கு 1,316 ரூபாய் குறைந்து, 72,361 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்னும் சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் இது தங்கம் விலைக்கு ஆதாரவாக ஏதேனும் முக்கிய காரணிகள் வந்தால், அதன் எதிரொலியாக இருக்கலாம். இல்லையெனில் மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+