தங்கம் விலை இருமடங்கு அல்லது மும்மடங்கு அதிகரிக்குமா? சாமனியர்களுக்கு ஷாக் கொடுக்கும் கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தினை தொட்ட பிறகு, பின்னர் படிப்படியாக குறைந்து வருகின்றது. குறிப்பாக நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 8% சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

எப்படி இருப்பினும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது நல்ல சரிவில் இருப்பதால், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. நிபுணர்களும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தங்கம் ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் தங்கம் விலை

ஆரம்ப காலத்தில் தங்கம் விலை

1933களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு $20 டாலர்கள் தான். அந்த காலகட்டத்தில் ஒரு சராசரி அமெரிக்க குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு 1500 டாலராக இருந்தது. இதே இந்தியாவில் தங்கம் விலையானது கடந்த 1925ம் ஆண்டில் 10 கிராம் தங்கம் விலை வெறும் 18.75 ரூபாயாகத் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்தியா சுதந்திரம் வாங்கிய போது கூட வெறும் 88.62 ரூபாயாகத் தான் இருந்துள்ளது.

கடந்த ஆண்டில் வரலாற்று உச்சம்

கடந்த ஆண்டில் வரலாற்று உச்சம்

ஏன் கடந்த 1979 வரையில் கூட 1000 ரூபாய்க்கு கீழ் தான் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. 1980ல் தான் 1330 ரூபாய்க்கும், இதே 2007ம் வருடத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 10,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் 2011ல் 26,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த 2018ல் கூட தங்கம் விலை அதிகபட்சமாக 31,535 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டில் வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டது.

அதிகம் வாங்கியிருக்கலாம்

அதிகம் வாங்கியிருக்கலாம்

இன்று உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாங்கும் பாலும், பிஸ்கட்டின் விலையும் கூட, அன்றைய காலத்தின் தங்கம் விலையை விட அதிகம். அந்தளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு 2,000ம் ஆண்டில் ஒரு சராசரி அமெரிக்கரின் வருமானம், 42,148 டாலர்களாகும் அப்போது அவுன்ஸ் தங்கத்தின் விலை $279 டாலர்களாகும். அப்போது நீங்கள் வாங்கியிருந்தால் உங்களது வருமானத்திற்கு 151 அவுன்ஸ் தங்கத்தினை வாங்கியிருக்கலாம்.

வாங்கும் அளவு குறைவு

வாங்கும் அளவு குறைவு

இதே 2008ம் ஆண்டில் சராசரி அமெரிக்கரின் வருமானம் 56,000 டாலர்களாகும். ஆனால் அன்று தங்கம் விலை அவுன்ஸுக்கு 869 டாலராகும். ஆனால் 2021ல் 61,937 டாலர்களாக வருமானம் உள்ளது. தற்போது தங்கம் விலை அவுன்ஸூக்கு சுமார் 1730 டாலர் என வைத்துக் கொண்டாலும் கூட, இன்று உங்களால் வெறும் 35 அவுன்ஸ் தங்கமே வாங்க முடியும்.

இதற்கு என்ன காரணம்?

இதற்கு என்ன காரணம்?

இது மிக சுவாரஸ்யமான ஒரு விஷயம். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வருமானம் என்பது வெறும் 47% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் விலையானது 520% அதிகரித்துள்ளது. ஆக அன்றைய காலத்தில் உங்கள் பணத்திற்கு தங்கத்தினை வாங்கி வைத்திருந்தால், இன்று அதன் மதிப்பு என்பது வேற லெவல்.

எப்பவுமே பாதுகாப்பு புகலிடம் தான்

எப்பவுமே பாதுகாப்பு புகலிடம் தான்

ஆக வட்டி குறைவான முதலீடுகளில் உங்களின் முதலீடுகளை முடக்குவதை விட, நல்ல வருமானம் கொடுக்கும் தங்கமாகவும், வெள்ளியாகவும் வாங்கி வைக்கலாம். இதே வேறு ஏதேனும் முதலீடுகளில் முதலீடு செய்தால் அதனை இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் என்ன லாபம் கிடைக்கும் என நினைக்கிறீர்கள். ஆக தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றில் உங்களது பணத்தினை நீங்கள் பாதுகாக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+