தங்கத்தினை விருப்பமான ஆபரணமாக மட்டும் அல்ல, நம்மவர்கள் விருப்பமான முதலீடுகளில் ஒன்றாகவும் பார்க்கின்றனர். அதிலும் தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. தொடர்ந்து லாபகரமான ஒன்றாகவும் இருந்து வருகின்றது.
மார்ச் 30 உடன் முடிவடைந்த ஓராண்டில் தங்கம் விலையானது 14% வருமானத்தினை கொடுத்துள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ஈக்விட்டி சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பி எஸ் இ சென்செக்ஸ் 2% ஏற்றத்தினை கண்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் பங்கு சந்தையா? தங்கமா? எதில் முதலீடு செய்வது? எதில் லாபம் அதிகமாக கிடைக்கும்? எது முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அது கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியினையும் ஊக்குவிக்கலாம். இது அதன் லாபத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது பங்குகள் அதிகரிக்கலாம். இது நீண்டகால நோக்கில் லாபகரமானதாக அமையலாம்.
இதே தங்கம் எனும்போது வட்டி கிடையாது. எனினும் ஆபரண தங்கத்தின் தேவையானது அதிகளவிலேயே இருந்து வருகின்றது. குறிப்பாக ஆசிய நாடுகளில் அதிகம் இருக்கலாம், அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தேவையானது அதிகரிக்கும்போது அது ஈக்விட்டிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதன் அவுட்லுக் என்பது கலவையாகவே இருக்கலாம்.
எப்படியிருப்பினும் தங்கம் என்பது கட்டாயம் போர்ட்போலியோவில் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று எனலாம்.

டாலரின் மதிப்பானது பலவீனமாக காணப்படும் நிலையில், நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம். குறிப்பாக பணவீக்க தரவானது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். பணவீக்கமானது அதிகரித்து வரும் சூழலில், வட்டி விகிதமானது அதிகரிக்கலாம்.
தொடர்ந்து வட்டி அதிகரித்து வரும் சூழலில், இது மேற்கொண்டு வங்கித் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை ஊக்குவிக்கலாம். ஆக முதலீட்டு ரீதியாகவும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம்.
குறிப்பாக சரிந்து வரும் பொருளாதாரம் என்பது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக இந்தியாவினை பொறுத்த வரையில் அட்சய திருதியை நெருங்கி வரும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். இந்த காலகட்டத்தில் பிசிகல் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது விலைக்கு ஆதாரவாகவும் அமையலாம்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?



Click it and Unblock the Notifications