Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு?

கொரோனா வைரஸ் பிரச்சனையால், பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து, மக்கள் கையில் அதிகம் பணம் இல்லை என்பது என்னவோ உண்மை தான்.

இருப்பினும் திருமணம் போன்ற நல்ல காரியங்களை இந்த வைகாசி, ஆனி மாதங்களில் அதிகம் நடக்கும். ஆடி மாதம் வந்துவிட்டால் திருமணத்துக்கு எல்லாம் விடுமுறை தான்.

ஆக இந்த நேரத்தில் திருமணம் எல்லாம் நடத்த இருப்பவர்கள், எப்படியாவது காசு பணத்தை உருட்டிப் பிரட்டியாவது தங்கத்தை வாங்கத் தான் செய்வார்கள். எனவே Chennai gold rate-ல் இருந்து தங்கம் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்னை தங்கம் விலை நிலவரம்

சென்னை தங்கம் விலை நிலவரம்

தமிழனோ, இந்தியனோ, வெளிநாட்டுக்காரனோ... யார் என்ன என பார்க்காமல், வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் ஆபரணத் தங்கம் (24 கேரட் 10 கிராம்) விலை 49,220 ரூபாயைத் தொட்டு எல்லோரையும் கலங்கடித்து இருக்கிறது. 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் சமீபத்தைய விலை உச்சமே 49,160 ரூபாயாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது புதிய உச்சமாக 49,220-ஐத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 45,120 ரூபாயைத் தொட்டு கிடு கிடுக்க வைத்திருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு

சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு

24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,922 ரூபாய் என்கிற கணக்கில், பவுனுக்கு 39,376 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்களாம். அதே போல 22 கேரட் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 4,512 ரூபாய் மேனிக்கு, பவுனுக்கு 36,096 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 1 கிராம்) - 4,922 ரூபாய்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (22 கேரட் 1 கிராம்) - 4,512 ரூபாய்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், டாலரில்) - 1,744 டாலர்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், ரூபாயில்) - 1,31,993 ரூபாய்
MCX ஆகஸ்ட் ஃப்யூச்சர் காண்டிராக்ட் - 46,546 ரூபாய்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்

சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, அமெரிக்க டாலரில் 1,744 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் 1,709 டாலர் வரைத் தொட்டு இறக்கத்தில் வர்த்தகமான சர்வதேச தங்கம் விலை, தற்போது மீண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.

தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்

சர்வதேச அளவில் இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகமாகும், ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 1,31,993 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் 75.54 ரூபாய்க்கு சரிந்து இருக்கிறது. அது கூட இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகமாகும், தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக இருக்கலாம்.

தங்கம் விலை இன்று - MCX

தங்கம் விலை இன்று - MCX

இந்தியாவின் கமாடிட்டி பங்குச் சந்தையான எம் சி எக்ஸில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை 47,080 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதே போல, அக்டோபர் 2020 மாதத்துக்கான தங்க காண்டிராக்டின் விலையும் 47,196 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+