ஒரு தாய், தன் குழந்தையைக் கொஞ்சுவதாகட்டும், காதலர்கள் தங்களின் காதன் அல்லது காதலியிடம் அன்பு பகிர்வதாகட்டும், ஒரு ஆசிரிய தன் மாணவனை பாராட்டுவதாகட்டும், தங்கம் என்கிற வார்த்தையை மிக சாதாரணமாக பயன்படுத்துவார்கள்.
அந்த அளவுக்கு, தங்கம் நம் வாழ்கையில் ஒன்றி இருக்கிறது. சரி இந்த முகூர்த்த காலங்களில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா?
Chennai Gold rate என்ன? கடந்த கால தங்கம் விலை வரலாறு என்ன சொல்கிறது என விரிவாகப் பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை நிலவரம்
தென் இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,780 ரூபாய்க்கு விற்கிறார்களாம். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,680 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.
சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு
10 கிராம் தங்கத்தை விடுங்கள், நமக்கு பவுன் கணக்கு தானே முக்கியம். ஒரு கிராம் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4,878 ரூபாய்க்கு விற்கிறார்களாம். ஆக 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை 39,024 ரூபாய்.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4,468. ஆக 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை 35,744 ரூபாய்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 1 கிராம்) - 4,878 ரூபாய்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (22 கேரட் 1 கிராம்) - 4,468 ரூபாய்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், டாலரில்) - 1,732 டாலர்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், ரூபாயில்) - 1,30,292 ரூபாய்
MCX ஆகஸ்ட் ஃப்யூச்சர் காண்டிராக்ட் - 46,329 ரூபாய்
தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்
சர்வதேச சந்தைகளில், அமெரிக்க டாலரில் வர்த்தகமாகும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, கடந்த ஒரு மாத காலமாக, மிகக் சில நாட்களில் மட்டுமே 1,700 டாலருக்குக் கீழ் வந்திருக்கிறது. ஆக 1,700 டாலர் என்பது அதன் வலுவான சப்போர்ட் புள்ளியாக மாறிக் கொண்டு இருக்கிறது. அதே போல 1,750 டாலர் வலுவான ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது. இன்று சர்வதேச தங்கம் விலை 1,732 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர் 1
ஆக சர்வதேச தங்கம் விலை 1,750 டாலரை உடைத்துக் கொண்டு மேலே போனால் இன்னும் சிறப்பாக விலை ஏறும் என்று சொல்லலாம். ஒருவேளை 1,700 டாலருக்குக் கீழ் வந்தால் விலை இறங்கும் என்று சொல்லலாம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக 1700 - 1750 என்கிற ரேஞ்சுக்குள்ளேயே தான் பெரும்பாலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்
இந்திய ரூபாயில், வர்த்தகமாகும் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்திலும் இதே கதை தான். 1,28,300 முதல் 1,32,300 என்கிற ரேஞ்சுக்குள்ளேயே தான், கடந்த ஒரு மாத காலமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1,30,292 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை இன்று - MCX
ஆகஸ்ட் 2020-ம் மாதத்துக்கான 10 கிராம் தங்கம் ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை 46,329 ருபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதே போல அக்டோபர் 2020-க்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 46,452 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் வாங்கலாமா
கடந்த மே மாத காலத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 4,620-ல் இருந்து 4,916 என சுமார் 6.4 % விலை அதிகரித்து இருக்கிறது.
அதே போல ஏப்ரல் மாதத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 4,308-ல் இருந்து 4,670 என சுமார் 8.4 % விலை அதிகரித்து இருக்கிறது. இப்படி கடந்த டிசம்பர் 2019 வரை கணக்கெடுத்துப் பார்த்தால் பிப்ரவரி தவிர மற்ற ஐந்து மாதத்திலும் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே தான் வந்திருக்கிறது.
தங்கம் வாங்கலாமா 1
எனவே மக்களே, எப்போது எல்லாம் தங்கம் விலை கடந்த சில வாரத்தில் இல்லாத அளவுக்கு சரிகிறதோ, அப்போது எல்லாம் தங்கத்தை வாங்குவதற்கான நல்ல வாய்ப்பாகப் பாருங்கள். இப்போதைக்கு 1.கொரோனா சார்ந்த பிரச்சனைகள்,
2. இந்திய சீனப் போர் நடவடிக்கைகள்,
3. அமெரிக்க சீன பிரச்சனைகள்... போன்ற சர்வதேச பிரச்சனைகள் ஒரு சுமூகமான நிலைக்கு வரும் வரை தங்கம் விலை ஏறிக் கொண்ட இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, நல்ல நேரத்தில், விலை குறைவாக இருக்கும் போதே ஆபரணத் தங்கத்தை வாங்கிவிடுங்கள்.
நகை வாங்குபவர்களுக்கு மட்டுமே
திருமணம் போன்ற நல்ல காரியங்களுக்கு, கட்டாயம் நகை வாங்க வேண்டும் என்பவர்கள் மட்டும், இந்த விலை ஏற்ற இறக்கத்தை பார்த்து ஆபரணத் தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள். முதலீடு செய்ய விரும்புபவர்கள், தங்க இ டி எஃப் அல்லது ஆர்பிஐ வெளியிடும் சவரன் தங்க பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?



Click it and Unblock the Notifications