Californium என்று ஒரு உலோகம் இருக்கிறது தெரியுமா..? இந்த Californium-த்தை வைத்து தங்கம் வெள்ளி போன்றவைகளை கண்டு பிடிக்கக் கூட பயன்படுத்துவார்களாம்.
இந்த உலோகம் தங்கத்தை விட பல மடங்கு விலை அதிகம். Californium உலோகம் ஒரு கிராமின் விலை சுமாராக 2.5 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், நமக்கு ஏனோ தங்கத்தின் மீது தான் மோகம் அதிகமாக இருக்கிறது. கல்யாண சீசன் வேறு விரைவில் முடிய இருப்பதால் நாம் Chennai Gold rate விவரங்களைப் பார்க்கத் தொடங்குவோம்.
சென்னை தங்கம் விலை நிலவரம்
மெரினா கடற்கரையை தன்னுள் கொண்டிருக்கும் சென்னை நகரத்தில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,640 ரூபாயைத் தொட்டு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,560 ரூபாயைத் தொட்டு விற்பனை ஆகிறதாம்.
சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை சென்னையில் 4,864 ரூபாய் மேனிக்கு 8 கிராம் (ஒரு பவுன்) தங்கம் விலை 38,912 ரூபாய்க்கு விற்பனை ஆகிறதாம். அதே போல 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னை நகரத்தில் 4,456 ரூபாய் மேனிக்கு ஒரு பவுன் தங்கம் 35,648 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறதாம்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் தங்கம் விலை (24 கேரட் 1 கிராம்) - 4,864 ரூபாய்
சென்னையில் தங்கம் விலை (22 கேரட் 1 கிராம்) - 4,456 ரூபாய்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், டாலரில்) - 1,707 டாலர்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், ரூபாயில்) - 1,29,143 ரூபாய்
MCX ஆகஸ்ட் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்ட் - 46,360 ரூபாய்
தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்
நாம் நேற்று தான், அமெரிக்க டாலரில் வர்த்தகமாகும் சர்வதேச தங்கம் விலை 1,700 - 1,750 டாலர் ரேஞ்சுக்குள் வர்த்தகமாவதாகச் சொல்லி இருந்தோம். இன்று ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,707 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்றைய நாளில் 1,697 டாலரைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. எனவே தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்
இந்திய ரூபாயில் வர்த்தகமாகும் சர்வதேச தங்கம் விலை, ஒரு அவுன்ஸுக்கு 1,29,143 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்திய ரூபாயில் வர்த்தகமாகும் தங்கம் விலை, கொஞ்சம் இறக்கத்தைச் சந்தித்து இருக்கிறது. இந்த விலை சரிவு தொடர்ந்து நீடித்தால் இந்திய சந்தைகளிலும் தங்கம் விலை சரியும் என எதிர்பார்க்கலாம்.
தங்கம் விலை இன்று - MCX
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும், ஆகஸ்ட் மாதத்துக்கான 10 கிராம் தங்கம் காண்டிராக்டின் விலை கடந்த 18 மே 2020 அன்று 48,190 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அதன் பின், இப்போது வரை தொடர்ந்து இறக்கம் கண்டு தான் வர்த்தகமாகி வருகிறது. தற்போது 46,360 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications