Chennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ!

இந்தியா ஒரு தங்க பூமி. இந்த தங்க பூமியில், தங்கத்துக்கும் இந்திய மக்களுக்கும் இருக்கும் தொடர்பு, புராண கதைகளில் இருந்தே தொடங்கிவிட்டது.

மகாபாரதம், ராமாயணம் தொடங்கி 10-ம் நூற்றாண்டு காலத்து ராஜா கதைகளில் கூட, பாட்டு பாடும் புலவர்களுக்கு பொற்காசு கொடுப்பது, உளவாளிகளுக்கு பொன் கொடுத்து விஷயங்களைப் பெறுவது என படித்து இருப்போம்.

என்றோ ஒரு காலத்தில் தங்கத்தின் மீது ஏற்பட்ட மோகம், இன்றுவரை நம்மை விட்டுப் போகவில்லை. சரி சென்னை தங்கம் விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்னை தங்கம் விலை நிலவரம்

சென்னை தங்கம் விலை நிலவரம்

தமிழகத்தின் தலை நகரமான சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,100 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 44,320 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். நேற்றைக்கு விட 10 ரூபாய் தான் அதிகரித்து இருக்கிறது. சரி பவுன் விலையைப் பார்ப்போம்.

சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு

சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு

22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,432 ரூபாய். ஆக 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 35,456 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே போல 24 கேரட் சுத்தமான ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,810 ரூபாய். ஆக ஒரு பவுன் (24 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 38,480 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 1 கிராம்) - 4,810 ரூபாய்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (22 கேரட் 1 கிராம்) - 4,432 ரூபாய்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், டாலரில்) - 1,723 டாலர்
சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், ரூபாயில்) - 1,30,789 ரூபாய்
MCX ஜூன் ஃப்யூச்சர் காண்டிராக்ட் - 46,546 ரூபாய்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்

சர்வதேச அளவில் ஒரு ட்ராய் அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலை 1,723 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது நேற்று வர்த்தகமான 1,720 டாலரை விட கொஞ்சம் அதிகம் தான். இருப்பினும் பெரிய அளவில் விலை ஏற்றம் இல்லை என்பது தான் ஒரே நல்ல செய்தி.

தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்

சர்வதேச அளவில், இந்திய ரூபாயில் வர்த்தகமாகும் ஒரு ட்ராய் அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. 1,30,789 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றை விட, இன்று சில நூறு ரூபாய்கள் தான் அதிகமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை இன்று - MCX

தங்கம் விலை இன்று - MCX

இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸி-ல் (Multi Commoditu Exchange) ஜூன் மாதத்துக்கான 10 கிராம் தங்க காண்டிராக்டின் விலை 46,546 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2020 தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 46,643 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+