சென்னை விமான நிலையம்: 3 மாதங்களாக பதில் அளிக்காத மத்திய அரசு.. என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பேச்சு தொடங்கியது முதலே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஆட்சி மாற்றம் நடந்து விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பின் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு மாற்று இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு கடந்த செப்டம்பரில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் இது வரை அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்காததை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்: 3 மாதங்களாக பதில் அளிக்காத மத்திய அரசு.. என்ன செய்ய போகிறது தமிழக அரசு?

பரந்தூர் திட்டத்தை ரத்து செய்த விஜய் அரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்காக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு இடங்களை தேர்வு செய்தது. இங்கே முதற்கட்ட சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு, செப்டம்பர் முதல் வாரத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிப்பது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் , மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்தாலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், மத்திய அமைச்சகமோ அல்லது இந்திய விமான நிலைய ஆணையமோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அந்த செய்தி கூறுகிறது.

Also Read

பொதுவாக, இதுபோன்ற முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு கோரிக்கைகள் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு, இந்நேரம் ஆய்வு முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அந்த ஆய்வு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என சொல்லப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்தில், தாமதத்திற்கான காரணத்தை அறியவும், முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தவும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் பேச பல முயற்சிகளை மேற்கொண்டனர் என அந்த செய்தி கூறுகிறது.

Recommended For You

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தை மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி. சோமநாதனிடம் கொண்டு சென்று, பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடிதம் எழுதியுள்ளதாம். அதில் பல மாதங்களாக பதிலுக்காக தமிழ்நாடு அரசு காத்திருப்பதையும், இரண்டாவது விமான நிலையத்திற்கான பணிகளை தொடங்க முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வை மிக விரைவாக மேற்கொள்வது ஏன் அவசியம் என்பதையும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டம் மட்டுமல்ல, சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டுமென அனுப்பிய கடிதத்திற்கும் கூட மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+