அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு:முதலமைச்சர் விஜய்யின் ராயல் லுக்..! இந்த டிரெஸோட விலை தெரியுமா?

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் , சன் நெட்வொர்க் குழுமத்தின் ஒரே வாரிசான கலாநிதி மாறனின் மகளும் , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி காவ்யா மாறனுக்கும் அண்மையில் கிரீஸில் திருமணம் நடந்தது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் இந்த திருமணம் நடந்தது.

சென்னையில் அனிருத் - காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இந்த திருமண வரவேற்பில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு:முதலமைச்சர் விஜய்யின் ராயல் லுக்..! இந்த டிரெஸோட விலை தெரியுமா?

இந்த பிரம்மாண்ட திருமண வரவேற்பு விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பெருமளவில் வைரலானது. இதில் விஜய்யின் ராயல் லுக் ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது மற்ற நட்சத்திர விருந்தினர்களிடமிருந்து அவரை தனித்து நிற்க செய்தது. தற்போது விஜய் அணிந்து வந்த ஆடை மற்றும் அதன் விலை குறித்த விவரங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

திருமண வரவேற்பு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் நேவி ப்ளூ நிற சூட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார். கோட் சூட்டில் பதிக்கப்பட்டிருந்த தங்க நிற பட்டன்கள், நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்த பட்டு பாக்கெட் ஸ்கொயர். கோட் சூட்டின் காலருக்கு அருகில் சிறிய மெரூன் நிற பட்டை ஆகியவை இருந்தன. இதனாலேயே ஆடை வடிவமைப்பாளர்கள் இதனை ராயல் லுக் என்கின்றனர்.

Also Read

விஜய் அணிந்திருந்த இந்த உடையின் மதிப்பு குறித்த தகவல்களை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இதன்படி, கோட் சூட் விலை 2.30 லட்சம் ரூபாய், பட்டு பாக்கெட் ஸ்கொயர் விலை சுமார் 7,500 ரூபாய், பிரத்யேக தங்க பட்டன்கள் விலை 1.47 லட்சம் என மொத்தமாக இந்த ஆடையின் விலை 3.67 லட்சம் ரூபாய் என மதிப்பிட்டுள்ளது.

Recommended For You

அனிருத் மற்றும் காவ்யா மாறனின் பிரம்மாண்ட வரவேற்பு விழாவில் விஜய்யின் வருகைக்கு பிறகு, இந்த ஆடை பலரது கவனம் பெற்ற ஆடையாக மாறியுள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் தான் இந்த வகை ராயல் லுக் ஆடைகளை அணிந்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஜெய்ப்பூர் ராயல் குடும்ப வாரிசு பத்மநாப் சிங் உள்ளிட்டோர் இதற்கு முன்பு இதே போன்ற ஆடையை அணிந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+