பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு வேலைபுரியும் பெரும் பகுதியினர் இந்தியர்கள் தான்.
இந்த நிலையில் தற்போது காக்னிசண்ட் நிறுவனம், அடுத்து வரும் சில மாதங்களில் 7000 பேரை ஆள் குறைப்பு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த வேலை குறைப்பு நடவடிக்கையால் மேலும் 6000 ஊழியர்களை இது பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் அதிகளவில் பணிபுரியும் இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு தான் இதனால் பெரும் பாதிப்பு இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போது பணியில் இருக்கும் நடுத்தர ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை 10,000 - 12,000 பேர் பணியில் இருந்து நீக்குவதாகவும் கூறிய நிலையில், இது 5000 பேரை மறுசீரமைத்தல் மற்றும் மறுபயன்பாடு செய்வதாகவும், வருவாய்க்கு பிந்தைய ஒரு மாநாட்டில் ஆய்வாளர்களுடன் இருந்த போது இப்படி அறிவிப்பை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவில் இதன் மொத்த பணி நீக்கமானது சுமார் 5000 - 7000 பேர் வரையில் இருக்கலாம் என்றும், இது மொத்த நிறுவன ஊழியர்களில் 2 சதவிகிதம் என்றும் இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு முக்கிய காராணம் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் போன்ற வாடிக்கையாளர்களுக்காக, காக்னிசண்ட் அதன் உள்ளடக்க மிதமான வணிகத்திலிருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பணி நீக்கமானது நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகம், தொழில்நுட்ப பிரிவில் வருவாயை பாதிக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் பணிகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்தாலும், இங்கு பணி புரியும் ஊழியர்களில் பெரும்பகுதி இந்தியர்கள் என்பதால் பெரும் பாதிப்பு இந்திய ஊழியர்களுகே என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் எங்கு எவ்வளவு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார் என்ற முழு விளக்கத்தை இந்த நிறுவனம் அளிக்கவில்லை.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு பின்பு இந்த நிறுவனம் பெருத்த நடஷ்டத்தை கண்டுள்ளதாகவும், இதனால் இந்த நிறுவனத்தின் பெரும் பகுதி ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும்
(ஆள் குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் காக்ணிசன்ட்.. இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு ஆபத்து) கூறியது. பின்னர் ஆள்குறைப்பு நடவடிக்கை ஏதும் இல்லை (அப்பாடா.. 2 லட்சம் பேரின் வயிற்றில் பால் வார்த்த காக்னிசண்ட்.. இந்தியாவில் பணி நீக்கம் இல்லை!) என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பது இந்திய ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications