உலக பொருளாதாரத்தின் நாடித் துடிப்பை தீர்மானிக்கும் சக்தியாக கச்சா எண்ணெய் விளங்கி வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழும்போதெல்லாம், எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர்வது வரலாறாகவே இருந்து வருகிறது.
கடந்த 1970-களில் நடந்த ஈரானியப் புரட்சியின் போது கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பாராத விதமாக 300% வரை எகிறி உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. அதனை தொடர்ந்து வளைகுடாப் போர் (Gulf War) மற்றும் லிபியா உள்நாட்டுப் போர் என ஒவ்வொரு மோதலின் போதும் 25% முதல் 300% வரை விலையேற்றங்கள் பதிவாகியுள்ளன. இன்று மீண்டும் ஒருமுறை ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரலாறு மீண்டும் திரும்புமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இந்த அதிரடி விலை மாற்றங்கள் உலக நாடுகளை எப்படிப் பாதித்தது? இதோ ஒரு விரிவான வரலாற்று பார்வை..

வரலாற்று ரீதியாக 1970-களின் அரபு எண்ணெய் தடை மற்றும் ஈரானிய புரட்சி, 1980-களின் ஈரான்-ஈராக் போர், 1990-களின் வளைகுடா போர், 2011-ன் லிபியா உள்நாட்டுப் போர் மற்றும் 2022-ன் ரஷ்ய-உக்ரைன் ஊடுருவல் ஆகிய அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. அது மேற்கண்ட அனைத்து காலகட்டங்களிலும் கச்சா எண்ணெய் விலை எகிறியது.
யுத்த பூமியாகும் ஈரான்: கச்சா எண்ணெய் விலையால் இந்தியாவிற்கு ஆபத்தா?
கடந்த 50 ஆண்டுகளில், மேற்கண்ட புவிசார் அரசியல் நெருக்கடிகளின் போது எண்ணெய் விலையானது 25% முதல் 300% வரை உயர்ந்தது. குறிப்பாக கடந்த 1973ல் ஓபெக் நாடுகள் இஸ்ரேலை ஆதரித்தமைக்காக, மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் தடை விதித்தன. இது அந்த சமயத்தில் கச்சா எண்ணெய் விலையானது 300% எகிற வழிவகுத்தது. அதன் பிறகு 1979ல் ஈரானியப் புரட்சியின் போது எண்ணெய் உற்பத்தியானது குறைக்கப்பட்டதால் 180% விலை ஏற்றம் கண்டது.
1990களில் ஈராக்-குவைத்-ஐ ஆக்கிரமித்த போது, எண்ணெய் விலையானது 15 டாலரில் இருந்து 40 டாலராக உயர்ந்தது. அதன் பிறகு, 2003ல் மீண்டும் ஒரு ஈராக் போரின் போது, 3 - 4 மாதங்களில் எண்ணெய் விலை 40% (35 டாலராக) ஏற்றம் கண்டது. முந்தைய முறைகளுடன் ஒப்பிடும்போது இந்த முறை விலை ஏற்றம் சற்று குறைவாகத்தான் இருந்தது. இப்பிரச்சனை முடிவுக்கு வந்தபோது, விலையானது விரைவில் 23 டாலர்களை தொட்டது. 2022ல் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது தொடங்கிய போது பிரெண்ட் கச்சா எண்ணெய் 120 டாலரை எட்டியது. இது மேற்கத்திய நாடுகள் ரஷ்யா எண்ணெய்-க்கு விதித்த தடை மத்தியில் காணப்பட்டது.
பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?
ஈரான் உலக எண்ணெய் உற்பத்தியில் வெறும் 2.5% பங்கை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு கொண்டிருந்ததை விட, பாதியாக குறைந்துள்ளது. ஈரானின் உற்பத்தி குறைவாக இருந்தாலும், உலக எண்ணெய் போக்குவரத்தில் 20% நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாகவெ நடைபெறுகிறது. ஆக இந்த பாதை அடைக்கப்பட்டால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களை தாண்டலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் இந்தியாவின் 50% கச்சா எண்ணெய் இறக்குமதியும், 54% இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. ஆக ஈரானின் எந்த ஒரு முடிவும் இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏற்கனவே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க கூடாது என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் மத்தியில், தற்போது ரஷ்யாவில் இருந்தும் எண்ணெய் வருவது குறைந்துள்ளது. தற்போது சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளையே அதிகம் சார்ந்துள்ளது.
பதற்றம் காரணமாக அமெரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவிலிருந்து மாற்று வழிகளில் எண்ணெய் வாங்கினாலும், எரிசக்தி விலை உயர்வு இந்தியாவின் வர்த்தக சமநிலையை பாதிக்கும். கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஒவ்வொரு 1 டாலர் உயர்வுக்கும், இந்தியாவின் வருடாந்திர இறக்குமதி செலவு 2 பில்லியன் டாலர் (சுமார் ₹16,600 கோடி செலவு) அதிகரிக்கும். ஆக இந்த மோதலானது சில வாரங்களில் முடிவுக்கு வந்தால் விலை விரைவில் சீராகலாம், ஆனால் நீடித்தால் இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலை சந்திக்கும். பங்குச் சந்தைகளும் ரத்தகளரி ஆகலாம். பல்வேறு துறைகளும் வீழ்ச்சியின் பிடியில் சிக்கும்.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications