டெல்லி: பான் 2.0 திட்டத்தின் மூலம் இந்தியாவில் கியூஆர் கோடு பொருத்தப்பட்ட பான் கார்டுகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. மக்கள் ஆன்லைன் வாயிலாகவே இந்த புதிய பான் கார்டு பெற்றுக் கொள்ள முடியும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பான் கார்டு அப்டேட்டினை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெறுவது தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் பான் 2.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி கியூஆர் கோடுடன் கூடிய புதிய பான் கார்டுகள் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன. தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய பான் கார்டுகளை மக்கள் ஆன்லைன் வாயிலாகவே புதிய பான் கார்டுகளாக மாற்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியாகவும் பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய பான் கார்டு பெற்று தருவதாக கூறி மக்களிடையே பலரும் தற்போது மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் Protean (இதற்கு முன்பு NSDL) அல்லது UTIITSL இணையதளங்கள் வாயிலாக மட்டுமே புதிய பான் கார்டினை பெற முடியும்.
இந்த அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று பான் எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்தால் போதும், அவருடைய அனைத்து விவரங்களும் அந்த தளத்தில் காண்பிக்கப்படும். அதனை உறுதி செய்தால் க்யூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் கார்டு சம்பந்தப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
பான் கார்டை நேரடியாக பெற வேண்டும் என விரும்புபவர்கள் 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் அவர்களின் வீட்டு முகவரிக்கு புதிய பான் கார்டு வந்துவிடும். முழுக்க முழுக்க அரசு மட்டுமே புதிய பான் கார்டு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது .இந்த நிலையில் தற்போது மக்களுக்கு புதிய பான் கார்டு வாங்கி தருவதாகவும் பான் கார்டனை அப்டேட் செய்து தருவதாகவும் கூறி பல்வேறு சைபர் மோசடிகள் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி-க்கு அடுத்த மகுடம்.. ரூ.2200 கோடின்னா சும்மாவா பாஸ்..!!
போலியான இணையதளங்கள் வாயிலாகவும், ஹெல்ப்லைன் எண்களையும் வழங்கி மோசடியாளர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். யாரேனும் உங்களிடம் பான் கார்டினை அப்டேட் செய்து தருகிறேன் புதிய பான் கார்டு பெற்று தருகிறேன் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என மின்னஞ்சலோ அல்லது மெசேஜோ அனுப்பினால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உங்களுடைய பான் கார்டு செல்லாததாக மாறிவிடும் உடனடியாக அப்டேட் செய்து விடுங்கள் என்பன போன்ற அழைப்புகளையும் மெசேஜ்களையும் அனுப்பி மோசடியாளர்கள் மக்களிடமிருந்து பணம் பறிக்கும் செயலிலும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலிலும் ஈடுபடுகிறார்களாம் . எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications